Saturday, 14 June 2025

சுக்கு நோய்களின் காலன்

 சுக்கு நோய்களின் காலன்

    பல ஆண்டுகளாக நம் தயாரிப்பில் சுக்கு கல்பம் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு நம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது. பொதுவாக சுக்கு அஜீரணம், பசியின்மை, வாயு தொல்லை போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்; அது உணவிலும் சேர்க்கப்பட்டு வந்திருக்கிறது இது நாம் அனைவரும் அறிந்த விஷயம். நாம் அறியாத விஷயங்களையும் இங்கு பார்ப்போம். நண்பர்கள் பொதுவாக என்னிடம் கேட்கும் கேள்வி அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இருக்கிறதா ? 

அது விளையாட்டாகவோ? வேடிக்கையாகவோ? 

கேட்கிறார்கள் அது எனக்கு தெரியாது!


என்னிடம் இந்த கேள்வி கேட்கும் பொழுது இதற்கு அஸ்வகந்தி ஒரு தீர்வு ஆகுமா? கரிசலாங்கண்ணியை பயன்படுத்தினால் போதுமே! வேம்பு ஒரு சிறந்த காயகல்பம்! என்றெல்லாம் கூறுவது உண்டு. ஆனால் என்னை பொறுத்தவரை சித்தர்கள் கூறியிருப்பதும் சரி 

"சுக்கு என்றால் ஒரு மருந்து பொருள் மட்டும் அல்ல, அது சகலவித நோய்களையும் குணமாக்கக்கூடிய ஆற்றல் படைத்தது"  

அகத்தியர் போகர் போன்ற சித்தர்களின் வாக்கும் இதேதான்


    நீங்கள் தினந்தோறும் காலை, மாலை டீ குடிக்கும் பொழுது இந்த சுக்கு தூளிலிருந்து அரை டீஸ்பூன் இந்த டீக்குள் சேர்த்து குடித்து பாருங்கள் இதன் சுவைக்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள். பிறகு கூடவே இந்த சுவை உங்களுக்கு எந்த ஒரு நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கொடுக்கும்.






நீர்க்கோவை, வாதபித்த ஆபாசக்கெடுதி, மலபந்தம், சூலை இவற்றிற்கு

    சுக்கு பலம் 12-க்கு சுண்ணாம்பில் 4 பலம் கவசித்து, மஞ்சளில் 4 பலம் கவசித்து, எருமைச் சாணத்தில் 4 பலம் கவசித்து, கவசங் கருகச் சுட்டு எடுத்துச் சீவி வைத்துக் கொண்டு, மூன்று தினுசிலும் 3 வராகனெடை எடுத்து நசுக்கி அரைப்படி சலத்தில் போட்டுக் காய்ச்சி வீசம் படியாகச் சுண்டின பின்பு, பனங்கற்கண்டு, நெய் இவைகளைக் கலந்து இளஞ்சூடாகச் சாப்பிட்டு வரவேண்டும்.













பலரும் சுக்கு Process-ன் போது Micro dust-ஐ Remove செய்வது இல்லை. ஆனால் இது கண்டிப்பாக Remove செய்யப்பட வேண்டும்.

அகத்தியர் 

"சுக்குமிகத் தாதுவாம் சொல்லரிய தீபனமாம் 

மிக்கவரு மாமம்போ மெல்லி நல்லீர் தக்கதொரு 

மூக்குதீர் பாய்ச்சல் போம் மூலரோகத் தினோடு 

தாக்குந் தாநோய் போகுந்தான்"



வீரமாமுனிவர்

"உன்னிய சுக்கு முதல் சரக்கு இதின்

       உத்தமமானக் குணங்கேளீர் 

பன்னிய சர்வரோக மெல்லாந் தீரும் 

       பார்த்து அறிந்துகொள் ஞானப்பெண்ணே"


அகத்தியர் 

"பற்றிட்ட சுக்கதனால் சர்வரோகம் போகும்"







WE FIRST PRIORITY FOR GIVEN THIS VEGETARIANS ONLY

சன்மார்க்க சங்கம் சார்ந்து உள்ளவர்கள் இம்மருந்தை நம்மிடம் வாங்கி பயனடையலாம். 



உங்களோடு இணைந்திருப்பது

அகத்தியர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், கோபிசெட்டிபாளையம்

Friday, 13 June 2025

வள்ளலார் - முக்கூட்டு சூரணம்

 வள்ளலார் - முக்கூட்டு சூரணம்

அகத்தியர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்


முக்கூட்டு தொடர்பான சில மருத்துவ குறிப்புகள் 

கரிசலாங்கண்ணி பொற்றலைக் கையாந்தகரை
    இதற்குக் கரிசாலை, கரிசலாங்கண்ணி,  என்றும் கூறுவர். இதை எவ்விதத்திலும் சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்விதத் தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் -- திடமுள்ளதாகி நெடுநாளைக்கு இருக்கும், முக்தி அடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது.

    மேற்சொன்ன கரிசலாங்கண்ணி நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தகரை கூடும், இந்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தைலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். பொற்றலைக் கையாந்தகரையை பொற்றலை என்றும் மஞ்சள் கூறுவர். கரிசலாங்கண்ணி, மஞ்சட்கரிசாலை என்றும் கூறுவர்.


தூதுளை
    மேற்சொன்ன இரு மூலிகைகளின் முக்கியத்துவம் போலவே தூதுளையும் மிகச்சிறந்த ஞானமூலிகையில் ஒன்றாகும். எனவே அறிவை விளக்குவதற்கும், கவனசக்தியை உண்டு பண்ணுவதற்கும். கரணம் ஓய்வதற்கும் கபத்தை அரிப்பதற்கும் யோக்கியதையுடைய ஓஷதி துாதுளை. இதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். புத்தியை விலாசப்படுத்தும்.


முசுமுசுக்கை
    முசுமுசுக்கை சமுலங் கொண்டு வந்து பசும்பாலில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக் கொண்டு கியாஷமாக்கிப் பாலொடு கொள்க. ஷை சூரணத்தில் மிளகு சர்க்கரை சிறுக சமன் சேர்த்துங் கொள்க. இவ்வாறு கரிசாலையுங் கொள்க. பின்பு பனை யோலை சுட்ட சாம்பலைப் பால்விட்டு அரைத்துப் புடஞ் செய்து நெய் சர்க்கரை வெண்ணெய் தேனிலுங் கொள்க. இதுபோல் ஷை பூ காய்ந்ததை பஸ்பஞ் செய்து கொள்ளத் தீரும்.


தேக மெலிவு, ஈளை சுக்கிலக்கெடுதிக்கு
    தேக மெலிவு, ஈளை, சுக்கிலக்கெடுதிக்கு பொன்னாங் கண்ணி ஒரு பங்கு, கரிசலாங்கண்ணி முக்கால் பங்கு இவை ஒருமுறை வேகவைத்து, தண்ணீர் வடித்து, பின்பு வேக வைக்கும்போது மிளகுப்பொடி போட்டு, நெய்விட்டு, சீரகத்தால் தாளித்துப் புரட்டிச் சாப்பிடவும்.

முக்கூட்டு தொடர்பான வள்ளல் பெருமானின் சில வரிகளை மேலே கொடுத்துள்ளேன். அகத்தியர் சித்த வைத்திய ஆராய்ச்சி மையத்தில் கரிசலாங்கண்ணி, பொற்றலை, தூதுவளை, முசுமுசுக்கை, சீரகம் இவை முறையாக சுத்தி செய்யப்பட்டு பாவனை செய்யப்பட்டு உடலில் தேவையில்லாத உஷ்ணம் செய்யாதவாறு தயாரிக்கப்படுகிறது. நம் அனுபவத்தில் சிறந்த முக்கூட்டு கலவையையே நாம் பயன்படுத்துகிறோம் (PERCENTAGE OF HERBALS COMBINATION IS DIFFER) நம் நண்பர்கள் பலரும் இதை வாங்கி சில வருடங்களாக பயனடைந்து வருகிறார்கள். 











WE FIRST PRIORITY FOR GIVEN THIS VEGETARIANS ONLY

சன்மார்க்க சங்கம் சார்ந்து உள்ளவர்கள் இம்மருந்தை நம்மிடம் வாங்கி பயனடையலாம். 


உங்களோடு இணைந்திருப்பது
அகத்தியர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், கோபிசெட்டிபாளையம்


Wednesday, 11 June 2025

லேகியம் என்றால் என்ன?

லேகியம் என்றால் என்ன?  

    இதுவரை நூற்றுக்கணக்கான லேகியங்கள் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான நண்பர்கள், வாடிக்கையாளர்கள் நம்மால் கடந்த 45 வருடங்களாக பயனடைந்து வந்திருக்கிறார்கள். பல்வேறு வகையான லேகியங்களை இதுவரை நாம் செய்திருக்கிறோம். அஸ்வகந்தி லேகியம், ஓரிதழ் தாமரை லேகியம், கூழ்பாண்டம் லேகியம், அத்திப்பழ லேகியம், சுக்கு லேகியம், தண்ணீர் விட்டான் லேகியம், தாது புஷ்டி லேகியம், முருங்கைப்பூ லேகியம், பெண்களுக்கான ரத்த விருத்தி லேகியம், போன்ற பல வகைப்பட்ட லேகியங்கள் நம்மால் செய்யப்பட்டிருக்கிறது.



    லேகியம் என்று கூறப்படும் இந்த மருந்து வகை பல்வேறு மருத்துவ குணங்களை உடைய உயர்ந்த வகை மூலிகை சரக்குகள் சர்க்கரை பாகுடன் சேர்த்து தேன், பசு நெய் ஆகியவற்றோடு கலந்து உறவாடி ஒரு Pigment form-ஐ அடையச் செய்து அது என்றும் கெடாமல் பக்குவத்தில் செய்யப்படும் முறையான மருந்து லேகியம் எனப்படும்.



    இது நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட முறைகளாகும் அகத்தியர், போகர், தேரையர், திருமூலர் அவர்களுக்கு பிறகு வந்த பல்லாயிரம் மருத்துவர்கள் அவரவர் அனுபவத்திற்கு தகுந்தவாறு லேகியங்கள் பல பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இன்று நம் அகத்தியர் சித்தமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்படும் சில லேகிய வகைகளையும் அவற்றுக்கான மூலப் பொருட்களை கையாண்ட விதத்தையும் இங்கு பதிவு செய்கிறோம்.


























    இங்கு பதிவிடப்படும் ஒவ்வொரு மருந்தும்  ஒவ்வொரு மருந்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மூலிகையும் தனித்தனியே சித்த வைத்திய சாஸ்திர முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு [PURIFIED] சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன். சுத்தி செய்யாமல் எந்த ஒரு மருந்தையும் பயன்படுத்தக் கூடாது. அதனால் கண்டிப்பாக side effects வரும்.














    நம்மிடம் கைவசம் உள்ளதை நீங்கள் தாராளமாக வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். லேகியங்கள் பொதுவாக நோய்களை  நீக்குபவையாகவும், நோய்கள் உடம்பில் ஏற்படாதவாறு Vitality, Immunity power, Blood quantity and quality also circulation, தாது விருத்தி, எலும்புகளுக்கு பலம் சேர்த்து ஆயுளையும் உடலையும் வளர்க்கச் செய்வதில் முதன்மையான மருந்துகளாகும். தொடர் பதிவுகளில் இன்னும் பல வகையான செய்திகள் தொடர்ந்து சேர்க்கப்படும்.


உங்களோடு இணைந்திருப்பது

அகத்தியர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், 

கோபிசெட்டிபாளையம்












ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...