வள்ளலார் - முக்கூட்டு சூரணம்
அகத்தியர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்
முக்கூட்டு தொடர்பான சில மருத்துவ குறிப்புகள்
கரிசலாங்கண்ணி பொற்றலைக் கையாந்தகரை
இதற்குக் கரிசாலை, கரிசலாங்கண்ணி, என்றும் கூறுவர். இதை எவ்விதத்திலும் சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்விதத் தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் -- திடமுள்ளதாகி நெடுநாளைக்கு இருக்கும், முக்தி அடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது.
மேற்சொன்ன கரிசலாங்கண்ணி நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தகரை கூடும், இந்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தைலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். பொற்றலைக் கையாந்தகரையை பொற்றலை என்றும் மஞ்சள் கூறுவர். கரிசலாங்கண்ணி, மஞ்சட்கரிசாலை என்றும் கூறுவர்.
தூதுளை
மேற்சொன்ன இரு மூலிகைகளின் முக்கியத்துவம் போலவே தூதுளையும் மிகச்சிறந்த ஞானமூலிகையில் ஒன்றாகும். எனவே அறிவை விளக்குவதற்கும், கவனசக்தியை உண்டு பண்ணுவதற்கும். கரணம் ஓய்வதற்கும் கபத்தை அரிப்பதற்கும் யோக்கியதையுடைய ஓஷதி துாதுளை. இதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். புத்தியை விலாசப்படுத்தும்.
முசுமுசுக்கை
முசுமுசுக்கை சமுலங் கொண்டு வந்து பசும்பாலில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக் கொண்டு கியாஷமாக்கிப் பாலொடு கொள்க. ஷை சூரணத்தில் மிளகு சர்க்கரை சிறுக சமன் சேர்த்துங் கொள்க. இவ்வாறு கரிசாலையுங் கொள்க. பின்பு பனை யோலை சுட்ட சாம்பலைப் பால்விட்டு அரைத்துப் புடஞ் செய்து நெய் சர்க்கரை வெண்ணெய் தேனிலுங் கொள்க. இதுபோல் ஷை பூ காய்ந்ததை பஸ்பஞ் செய்து கொள்ளத் தீரும்.
தேக மெலிவு, ஈளை சுக்கிலக்கெடுதிக்கு
தேக மெலிவு, ஈளை, சுக்கிலக்கெடுதிக்கு பொன்னாங் கண்ணி ஒரு பங்கு, கரிசலாங்கண்ணி முக்கால் பங்கு இவை ஒருமுறை வேகவைத்து, தண்ணீர் வடித்து, பின்பு வேக வைக்கும்போது மிளகுப்பொடி போட்டு, நெய்விட்டு, சீரகத்தால் தாளித்துப் புரட்டிச் சாப்பிடவும்.
முக்கூட்டு தொடர்பான வள்ளல் பெருமானின் சில வரிகளை மேலே கொடுத்துள்ளேன். அகத்தியர் சித்த வைத்திய ஆராய்ச்சி மையத்தில் கரிசலாங்கண்ணி, பொற்றலை, தூதுவளை, முசுமுசுக்கை, சீரகம் இவை முறையாக சுத்தி செய்யப்பட்டு பாவனை செய்யப்பட்டு உடலில் தேவையில்லாத உஷ்ணம் செய்யாதவாறு தயாரிக்கப்படுகிறது. நம் அனுபவத்தில் சிறந்த முக்கூட்டு கலவையையே நாம் பயன்படுத்துகிறோம் (PERCENTAGE OF HERBALS COMBINATION IS DIFFER) நம் நண்பர்கள் பலரும் இதை வாங்கி சில வருடங்களாக பயனடைந்து வருகிறார்கள்.
WE FIRST PRIORITY FOR GIVEN THIS VEGETARIANS ONLY
சன்மார்க்க சங்கம் சார்ந்து உள்ளவர்கள் இம்மருந்தை நம்மிடம் வாங்கி பயனடையலாம்.
உங்களோடு இணைந்திருப்பது
அகத்தியர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், கோபிசெட்டிபாளையம்
No comments:
Post a Comment