லேகியம் என்றால் என்ன?
இதுவரை நூற்றுக்கணக்கான லேகியங்கள் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான நண்பர்கள், வாடிக்கையாளர்கள் நம்மால் கடந்த 45 வருடங்களாக பயனடைந்து வந்திருக்கிறார்கள். பல்வேறு வகையான லேகியங்களை இதுவரை நாம் செய்திருக்கிறோம். அஸ்வகந்தி லேகியம், ஓரிதழ் தாமரை லேகியம், கூழ்பாண்டம் லேகியம், அத்திப்பழ லேகியம், சுக்கு லேகியம், தண்ணீர் விட்டான் லேகியம், தாது புஷ்டி லேகியம், முருங்கைப்பூ லேகியம், பெண்களுக்கான ரத்த விருத்தி லேகியம், போன்ற பல வகைப்பட்ட லேகியங்கள் நம்மால் செய்யப்பட்டிருக்கிறது.
லேகியம் என்று கூறப்படும் இந்த மருந்து வகை பல்வேறு மருத்துவ குணங்களை உடைய உயர்ந்த வகை மூலிகை சரக்குகள் சர்க்கரை பாகுடன் சேர்த்து தேன், பசு நெய் ஆகியவற்றோடு கலந்து உறவாடி ஒரு Pigment form-ஐ அடையச் செய்து அது என்றும் கெடாமல் பக்குவத்தில் செய்யப்படும் முறையான மருந்து லேகியம் எனப்படும்.
இது நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட முறைகளாகும் அகத்தியர், போகர், தேரையர், திருமூலர் அவர்களுக்கு பிறகு வந்த பல்லாயிரம் மருத்துவர்கள் அவரவர் அனுபவத்திற்கு தகுந்தவாறு லேகியங்கள் பல பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இன்று நம் அகத்தியர் சித்தமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்படும் சில லேகிய வகைகளையும் அவற்றுக்கான மூலப் பொருட்களை கையாண்ட விதத்தையும் இங்கு பதிவு செய்கிறோம்.
இங்கு பதிவிடப்படும் ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு மருந்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மூலிகையும் தனித்தனியே சித்த வைத்திய சாஸ்திர முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு [PURIFIED] சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன். சுத்தி செய்யாமல் எந்த ஒரு மருந்தையும் பயன்படுத்தக் கூடாது. அதனால் கண்டிப்பாக side effects வரும்.
நம்மிடம் கைவசம் உள்ளதை நீங்கள் தாராளமாக வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். லேகியங்கள் பொதுவாக நோய்களை நீக்குபவையாகவும், நோய்கள் உடம்பில் ஏற்படாதவாறு Vitality, Immunity power, Blood quantity and quality also circulation, தாது விருத்தி, எலும்புகளுக்கு பலம் சேர்த்து ஆயுளையும் உடலையும் வளர்க்கச் செய்வதில் முதன்மையான மருந்துகளாகும். தொடர் பதிவுகளில் இன்னும் பல வகையான செய்திகள் தொடர்ந்து சேர்க்கப்படும்.
உங்களோடு இணைந்திருப்பது
அகத்தியர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்,
கோபிசெட்டிபாளையம்
No comments:
Post a Comment