ஜீவகாருண்யம் - தானம்
திருக்குறள்
தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
[ தானமும், தவமும் மக்களிடையே இல்லை எனில் இப்புவியில் வானம் மழையை பொய்விக்காது, தானமும், தவமும் இருந்தால் மட்டுமே மழை உண்டு ]
இதையே ஒளவையாரும் கொன்றை வேந்தனின் விளக்குகிறார்
வானம் சுருங்கில் தானம் சுருங்கும்
ஆத்திச்சூடி
ஈவது விலக்கேல்
"NEVER TRY TO STOP ANYONE FROM GIVING AID TO OTHERS"
தானத்தை விரும்பு
சிவவாக்கியர்
திருத்தலம் திருப்பணி திருவிழாவும் செய்திட
ஒருத்தர் நற்கதி பெறவும் உள்ளதோ சொல்லெங்கினும்
வருத்தமின்றி ஏழைகட்கு மாதுலர் பரங்கட்கும்
பெருத்தவன் அன்னதானம் செய்யப் பேருலகை அடைவரே
கோவில்களுக்கு திருப்பணிகள் திருவிழலாக்கள் செய்ய நம் செல்வதை செலவழித்தால் அதனால் அனைத்து விதமான சுக போக மான வாழ்க்கையை அடைந்து விடலாம் என்ற எண்ணம் வேண்டாம். ஒரு வேளை உணவுக்கு எதிர்பார்க்கும் ஏழை எளியவர்களுக்கு நம்மால் ஆன உதவி செய்ய அன்னம் ஆடை ஏதேனும் கொடுக்க அதனால் ஏற்படும் புண்ணியம், தானம் கொடுத்தவரை பேருலகாகிய சொர்க்கத்தை அடைவார்கள்.
ஏழை பஞ்சையான பேரிஏர்ப்பவர் துயர்தெரிந்து
கூழையாகிலும் அவர் கொலை குளிர ஈய்பவர்
வாழையடி வாழையாக வாழ்ந்திட எந்நாளுமே
தாழையைப் போலத் தழைத்துச் சந்ததம் இருப்பரே
வறுமையால் வயறு வாடும் ஏழைகளின் துயர் அறிந்து அவர் உண்ண கூழையாகிலும் உண்ண கொடுக்கும் மனமுடைய தர்மவான்களின் குடி வாழையடி வாழையாக தழைக்கும்.
தாயுமானவர்
தானம் தவம் தருமம் சந்ததமும் செய்வர்சிவ
ஞானந் தனை அணைய நல்லோர் பராபரமே .........
தானமும் தவமும் யோகத் தன்மையும் உணரா என்பால்
ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்குவாயோ
பானலங் கவர்ந்த தீஞ்சொற் பச்சிளங் கிள்ளைகாண
வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தினானே
சிவ கடாட்சம் வேண்டுமெனில் தானம் வேண்டும். தாயுமான சுவாமிகள் தவத்தையும் யோகத்தயும் பாடலில் இரண்டாவது மூன்றாவது பொருளாக வைத்துள்ளார் தானத்தை முதல் பொருளாக வைத்து பாடியுள்ளார்.
திருமந்திரம்
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே
பசி என்று வந்தவனுக்கு உணவை கொடு அவன் செல்வந்தனா ஏழையா என்று பார்க்காதே அவன் பசியை மட்டும் பார். பழைய உணவு என்று அதை தூக்கி ஏரியாதே அதை உண்ணகூட ஏழை உண்டு அவன் எங்கிருந்தாலும் அவனை தேடி உணவை கொடு, காகம் தான் உணவு உண்ணும் போது கரைந்து மற்ற காகங்களையும் கூப்பிட்டு உண்கிறது மனிதா நீயும் வறியவர்க்கு கொடுத்து உண்.
அகர மாயிரம் அந்தணர்க் கீயிலன்
சிகர மாயிரம் செய்து முடிக்கிலன்
பகரும் ஞானியின் பகலூன் பெலத்திர்க்கு
நிகரில்லை யென்பது நிச்சயம் தானே
1000 அந்தணர்களை அழைத்து வாழ்வு நலம் பெற யாகங்கள் நடத்தவில்லை. 1000 கோவில்கள் கட்டி கும்பாபிஸேகம் செய்து புண்ணியம் பெறவில்லை. அனால் ஒரு முற்றும் துறந்த பட்டினத்தார் தாயுமானவர் போன்ற ஞானிகளுக்கு ஒரு வேளை உண்ண உணவு அளித்த பலன் மேற்கண்ட செயல்களை காட்டிலும் மிகவும் உயர்ந்த தர்மம் ஆகும். இது சத்தியம்.
புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியாநிற்க்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறியாமல் நழுவுகின்றாரே
தானம் என்ற புண்ணியம் செய்பவர்களுக்கே இவ்வுலகில் செடிகொடிகளில் பூக்கள் பூக்கின்றன, இவர்களுக்காகவே வானம் மழை பொய்விக்கிறது. ஆனால் எண்ணிக்கை இல்லாத அறிவிலிகள் புண்ணியம் செய்வது தான் ஈசனை சென்று அடையும் வழி என்று அறியாமல் இறக்கிறார்கள்.
https://youtu.be/7W6s27irwKw
படமாடக் கோயில் பகவர்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொள் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொள் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே
சித்திர ஓவியங்களும் மாடங்களையும் உடைய கோவிலில் குடிகொண்டுள்ள இறைவனுக்கு ஒரு காணிக்கை செய்தால் அது இறைவனுக்கு செய்யும் திருப்தியை விட, நடமாடும் உடலையே கோவிலாக கொண்டுள்ள அடியவர்களுக்கும் முதியவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு, உடை, இருப்பிடம், தானிய வகைகள் போன்ற ஏதேனும் ஒரு தர்மம் செய்வதால் இறைவனுக்கு செய்யும் காணிக்கையை விட உயர்ந்ததாகும்.
இன்னும் ஆயிரம் பாடல்களை உதாரணமாக கூற முடியும் தர்மமே
அனைத்திலும் சிறந்தது என்று
ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்
ஜோதிடமே அனைத்தையும் நிர்ணகிக்கும் என பலபேர்களுடைய எண்ணமாக இருக்கிறது இவர்கள் அனைவரும் இறைவழிபாடும் தோஷ நிவர்த்தி பூஜைகளும் யாகங்களும் சிறப்பு அபிஷேகங்களும் அதிதீவிர நம்பிக்கையும் பற்றும் வைத்துள்ளனர். இவர்கள் இந்த நம்பிக்கையில் மாறுவது இல்லை. சில மனோதிடம் இல்லாத அப்பாவிகளை சிலர் இதன்மூலம் ஏமாற்றி பிழைப்பதும் உண்டு.
ஆனால் உண்மையான ஜோதிட சாஸ்திரம் சொல்லும் நவக்கிரக சாந்தி முறைகள் என்னவென்றால் ஜீவகாருண்யம்மொடு உடைய பக்தியை செய்தல் மட்டுமே இறைவன் உண்மையான கருணை செய்வார். அதனால் எந்த நவக்கிரக நாயகர்களும் அந்த நபரை என்றும் துன்புறுத்த மாட்டார்கள் என்று கூறுகிறது. அதற்கான ஆதாரம்
ஜோதிட அரிச்சுவடி
இதன் மூலங்கள் குருவும் சிஷ்யனும் உரையாடிக்கொண்டிருப்பது போன்று அமையும்சிஷ்யன்
நற்புத்தி போதித்து எந்தனுக்கு
நவக்கிரகமிருந்த ராசிகளுக்கேற்ற
உற்றபலனுக்கீடாய் நன்மை துன்மை
உடையவர்களாயிருப்பார் என்று உரைத்தீர்
பற்றுஅற்ற ஞானிகட்கு கிரகவேதை
பாலாபலனை கொடுக்காதோ? விபரமாக
சற்றெனக்குப் போதிப்பீர் குருவே உன் தாள்
சரணடைந்து வினவினேன் சாற்று வீரே
குரு
புத்தியுள்ள சீஷா நீ பொறுமையாய் கேளு
பூதலத்தில் மானிடராய் பிறந்திட்டாலும்
சத்தியமும் பொறுமையுடன் அடக்கத்தோடு
சாந்தம் ஜீவகாருண்யம் தயாளந்தன்னை
எத்ததியும் மனம்திருத்தி வாழ்ந்திருந்து
ஈஸ்வரனை தியானித்தால் நவகிரகங்கள்
எத்ததியும் கஷ்டமில்லா சுகத்தை தந்து
எப்போதும் காத்திடுவார் கவனிப்பாயே
குரு
அவனியிலே பிறந்தோர்கள் எந்தநாளும்
அடக்கம் பொறுமை சாந்தம் தயாளத்தோடு
கவனமுடன் ஜீவகாருண்யமாக
காசினியிலே இருந்தால் மறுஜென்மத்தில்
நவக்கிரக மொன்பதுபே ரெந்தநாளும்
நன்மையாய் சுபபலனை தருவாரப்பா
எவர்களையும் இம்சிக்கா திருப்பாயானால்
ஏற்ற சுபபலன் அனைத்தும் கிடைக்கும் பாரே
வள்ளலார்
பசி தவிர்த்தல் எனும் ஜீவகாருண்யம் (தர்மம், தானம் )
செய்வதால் உண்டாகும் நன்மைகள்
ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பதை உணர்ந்து, பசித்த ஜீவர்களின் பசிக்குறிப்பறிந்து சாதி ஒழுக்கம், சமய ஒழுக்கம், ஆச்சார ஒழுக்கம், தேச ஒழுக்கம் முதலானவைகளை குறித்து விசாரிக்காமல் பசியாற்றுவிக்கின்றவர்களுக்கு உண்டாகும் நன்மைகள்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகளுக்கு நம்மால் உதவிட முடியும்
விதிவசத்தால் வீட்டை விட்டு வெளியேறிய சந்நியாசிகளுக்கு உதவிட முடியும்

ரோட்டில் அனாதையாக உள்ள ஐந்துஅறிவு ஜீவன்களுக்கு நம்மால் உதவிட முடியும்

கிறுஸ்துவத்திலும் தர்மம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது

புத்த மதத்திலும் தர்மம் போதிக்கப்பட்டுள்ளது

இந்து மதத்திலும் தர்மம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது
இஸ்லாத்திலும் தர்மம் கடைபிடிக்கப்படுகிறது

சன்மார்க்கத்தில் தர்மம் தெய்வ வழிபாடாக கொண்டாடப்படுகிறது

தர்மம் செய்ய பணம் வேண்டியதில்லை மனம் இருந்தால் போதும் நம் உணவை கூட பங்கு தரலாம்
ஆதலால் தர்மம் செய்ய மறவாதீர்

தொடரும்
அநேக தொகுப்புக்களை அற்புதமாக வழங்கியுள்ளீர்கள். அருமையாக உள்ளது.இப்படியே தொடரலாமே..
ReplyDeleteநன்றி M.STALIN sir
ReplyDelete