Wednesday, 23 January 2019

புளியாரையின் புகழ்




புளியாரையின் புகழ் 

தரை ஒட்டி படரும் சிறிய செடியினம் இதன் பயன்கள் அனேகம். புளிப்பு சுவையை உடையது. காயசித்தி மூலிகைகளில் இதுவும் ஒன்று. மலைகளிலும் சமவெளிகளில் வளரக்கூடியது. வீட்டில் பயிர் செய்து வளர்த்தலாம். இந்த கீரையை தனியாக பொரியலும், சாம்பார்களிலும் சேர்த்து பயன்படுத்தலாம். உணவின் ருசியை அதிகரிக்க செய்யும்.         

சித்த மருத்துவம் தழைத்தோங்கவும். தமிழ் மக்கள் அனைவரும் சத்தான உணவுகளை உண்ணவேண்டும், நோய் எதுவும் வராமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும்  என்ற பேராசையுடன் தமிழ் இனத்துக்காக இந்த ஒளஷதத்தின் பயன்களை வெளியிடுகிறேன்.




புளியாரை பற்றிய கருத்துக்களை நான் சொல்லி பெயர்வாங்கி கொள்வதை விட கடந்த நூற்றாண்டின் வைத்திய ஜாம்பவான்களான மூலிகை மணி கண்ணப்பர் மற்றும் வைத்திய ரத்தினம் ஜட்ஜ் வி.பலராமய்யா போன்றோர்களின் கருத்தை மட்டும் இங்கு பதிவிடுகிறேன். 










புளியாரை மூலிகை இரண்டு விதம் உண்டு நம் ஊர்களில் இருக்கும் புளியாரை மஞ்சள் நிற பூ பூக்கும் செடியினம். அதே புளியாரை மலைக்காடுகளில் குளிர்ச்சி நிறைந்த பிரதேசங்களில் ஊதா நிற சற்று பிங்க் நிறத்துடனும் பூ பூக்கும் செடியினம். என் அனுபவத்தில் மஞ்சள் நிற புளியாரை பல மருந்துகளிலும் உணவாகவும் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் நீல பூ பூக்கும் புளியாரையை நான் பல மலை பகுதிகளில் பார்த்திருக்கிறேன் இன்னும் பயன்படுத்தியது இல்லை.     

   


                  



    




     



       

            




           






   


   



 புளியாரையின் அனுபவ ரீதியான உபயோகம் பாஷாணத்தை கையாளும் வைத்தியர்களுக்கு வீர பாஷாணம் மூலம் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு புளியாரையை 3 அல்லது 4 நாட்கள் அரைத்து குடித்து வந்தால் அல்லது பச்சை கீரையை அப்படியே உண்டாலும் வீர பாஷாண விஷம் முறிவுஅடையும். 



வாழ்க தமிழ் 
ஓம் சரஹணபவ     
                                                                                                                நன்றி 
                                                                                                                இப்படிக்கு 
                                                                                                                திருவருள்பிரகாசம் 
















1 comment:

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...