Saturday, 19 January 2019

தூதுவளையின் ஆற்றல்




தூதுவளையின் ஆற்றல் 

தூதுவளை ஒரு ஞான மூலிகை எனவும் இதை தினமும் 
உணவில் சேர்க்க வற்புறுத்துகிறார் வள்ளலார்

தூதுவளையின் சுவாரஸ்யமான தகவல்கள் சைவம், வைணவம்
 முதலிய மார்க்கங்களிலும் ஞானம், யோகம், வைத்தியம் போன்ற  சித்தர்களின் சாத்திரங்கள் வாயிலாகவும் புகழப்பட்டுள்ளது. 

Sol trilob1.jpg

திருமூலர் திருமந்திரத்தில் தூதுவளை 
        ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு,
        பேரினை நீக்கிப் பிணம் என்று பேர்இட்டு,
        சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
        நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே. 
                                                (திருமந்திரம்) 
            சூரை = தூதுவளை 
            ஒருவர் எவ்வளவுதான்  சொத்துக்களும் நில புலம்களும் வைத்திருந்தாலும் அவர் இறந்த பின் இடுகாட்டில் அவரை புதைக்கும் போது தான் இவன் எவ்ளோ சம்பாரித்து என்ன பலன் உயிரும் செல்வமும் உறவும் நிலையாமை என்பதை மற்றவர்கள்  உணர்கிறார்கள் 

அந்த ஒரு நிமிட ஞானம் மனிதனுக்கு இடுகாட்டில் தான் கிடைக்கிறது எனவே இந்த சூரை என்ற  தூதுவளை ஆனது அங்கு வளர்த்ததாம் இதை திருமூல நாயனார் இங்கு சூரையான் காடு என்று மறை பொருளாக தூதுவளையை (ஞான மூலிகை) குறிப்பிடுகிறார்.

தூதுவளை இடுகாட்டில் வளர்ந்ததுக்கான மற்றுமொரு காரணம். 

இந்த தூதுவளை நெய்யோடு பாதார்த்தத்தில் சேர்க்கப்பட்டால் உடலுக்கு அதிக அளவு வலிமையை தரும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. 

பயோ சால்ட் (bio chemistry salt)  என்ற ஒரு வைத்திய முறை உள்ளது. இது ஜெர்மனியை சார்ந்த Dr.wilhelm heinrich schussler (1821-1898)  என்பவரால் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் இறந்தவர்களை எரித்த சாம்பல் மற்றும் பதப்படுத்தப்பட்ட மம்மி போன்றவற்றை சேகரித்து, மனித திசு நார் சாம்பல் ஆகியவற்றை ஆராய்ந்து முடிவில் மனித உடலில் 12 வகையான உப்புகள் மட்டுமே உள்ளன அவை அளவுக்கு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ மனிதனுக்கு நோய் ஏற்படும் என்று கண்டறிந்தார். இந்த bio chemistry salt மருந்துகள் பெரும்பாலும் homeopathy மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. சரி இதற்கும் தூதுவளைக்கும் என்ன தொடர்பு?     
                                Dr.wilhelm heinrich schussler (1821-1898)

டாக்டர் சுல்சர் கண்டறிந்த 12 திசு உப்புகள் இடுகாட்டு சாம்பலில் இருந்து எடுத்த மாதிரிகளில் கிடைத்தவை. எனில் அந்த இடுகாட்டில் விளைந்த தூதுளையும் அணைத்து திசு உப்புகளின் ஆற்றலை பெற்றது. சித்த வைத்திய நூல்களிலும் இது பலகாரியாக (IMPROVE THE STRENGTH AND VITALITY) குறிப்பிடப்பட்டுள்ளது.    


அனுபவத்தில் கண்டது 


எங்கள் ஊர் நல்லாம்பட்டி என்ற ஒரு சிறு கிராமம். முன்னொரு காலத்தில் அந்த கிராமத்தில் இரும்பு பட்டறை கொல்லர் ஒருவர் இருந்தார். அவர் இந்த தூதுவளையை நெய்யுடன் தினமும் தன் மதிய உணவில் சேர்த்தி வந்தார். அவர் இதை அவர் நீண்ட நாட்களாக உட்கொண்டு வந்தார். அவர் வலிமை என்ன தெரியுமா? 





அந்த காலத்து செம்பு காசை அவர் இரண்டு விரல்களுக்கு இடையே வைத்து மடக்கி விடுவார் அவ்வளவு வலிமை உடையவர். அவர் பிரதான உணவு தூதுவளை மட்டுமே. இது மட்டும் இல்லாமல் தூதுவளை உணவின் சுவையை அதிகரிக்கும். இது ஒரு காயகல்ப மூலிகை. இதில் வெள்ளை தூதுவளை, நீலநிறமுடைய பூ சாதாரண தூதுவளை என்று இரு விதமான தூதுவளை உள்ளது. நீல பூ பூக்கும் தூதுவளை பெரும்பாலான இடங்களில் கிடைக்கும்.   


தூதுவளை பூ    

ஒருவர் அழகு என்பது அவர் உணவின் சாரத்தை பொருத்தும் அமையும். தூதுவளை பூக்களை உணவில் பயன்படுத்தினாலோ அல்லது சித்த வைத்தியர்களின் ஆலோசனை படி தூதுவளை லேகியம் போன்ற சத்து மருந்துகளாகவோ எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக அவர்களின் ஆண் பெண் சக்தியும் (விந்து நாத சக்தி) அதிகரிக்கும் என்பது சித்த வைத்திய சாத்திரங்களின் முடிவு.    

தூதுவளை பூ உடலுக்கு தேவையான தாதுக்களை உற்பத்தி செய்கிறது கூடவே அழகு தேஜஸ் ஆண்மையை அதிகரிக்கிறது. இது பெண்களுக்கும் பொருந்தும் masculine, feminine க்கு தேவையான ஹார்மோன்களையும் சுரக்க வைக்கும்.   


சைவத்தில் தூதுவளை 

தூதுவலைக்கறியால் சுந்தரர் மனதில் இடம் பிடித்த சோமாசிமாற நாயனார்  



சிவனடியார்களைப் பார்த்தால் நெக்குருகிப் போய் பணிவிடை செய்யும் அருட்தொண்டர். தவறாமல் சோம வேள்வி செய்து ஈசனை வழிபடுவதையே வழக்கமாய்க் கொண்டவர். சுந்தரர் மீது மாறாப் பாசம் கொண்டு அவர்தம் நட்பைப் பெற விரும்பி இருக்கிறார். அதற்கான நேரம் வருமென்று காத்திருந்தாராம். இருமலால் சுந்தரர் அவதியுற்றது தெரிந்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தூதுவளைக் கீரை கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
சுந்தரர் : இப்போதெல்லாம் தினசரி கீரை வருகிறது.. 
"அடடா..! என் மீது பிரியம் காட்டுகிற அந்த மகான் யார்?"
வாசல் நடையில் இருந்து நிழலாய் ஒரு உருவம் உள்ளே ஓடி வந்தது. ‘திருச்சிற்றம்பலம்..’ ‘அடியேன்.. அடியேன்’
"யாரது.. எழுந்திருங்கள்..!"
சுந்தரர் கைலாகு கொடுத்து எழுப்பிப் பார்த்தார்.
"அடியேன் மாறன்.. "
"சோமாசிமாறனா.. தவறாமல் சோம யாகம் செய்து எம்பிரானுக்குப் பிரியமான சோமாசிமாறனா!"
தம்பிரான் தோழர் சுந்தரர் கண்களில் ஆச்சர்யம்.
"தங்கள் பிரியத்துக்கு ஏங்கித் தவிக்கும் அடியவன் மாறன்.. காணாமலே நெஞ்சில் நேசம் வளர்த்து, இன்று கண்டதால் புத்துயிர் பெற்றேன்."
"என்ன பாக்கியம் எனக்கு.. தங்கள் நட்பு கிட்டியது.." சுந்தரர் ‘அடியார்க்கும் அடியேன்’ என்னும் தொனியில் முகமெல்லாம் மலர்ச்சியாய்க் கூறியதைக் கேட்ட மாறன் மெய்சிலிர்த்துப் போனார்.
"சிவ..சிவ"
"நண்பரே.. என்னால் ஆகக் கூடியது ஏதேனும் உண்டா.. சொல்லும்.. அவனருளால் கூட்டித் தருகிறேன்.."
சட்டென்று வாய் மொட்டு மலர்ந்து விட்டது!
"அடியேன் செய்யும் யாகத்திற்கு ஈசனே வந்து அவிர்ப்பாகம் பெற்றுப் போக வேண்டும்.. தாங்கள்தான் அருள் கூட்ட வேண்டும்"
‘ஆஹா! மாறனிடம் வசமாய் சிக்கிக் கொண்டேனே.’ சுந்தரர் மனம் விட்டு சிரித்தார்.
"அப்படியே ஆகட்டும்.. உங்கள் யாகத்திற்கு அந்தக் கைலாய நாதனே வருவார்.. செல்லும். ஏற்பாடுகளைச் செய்யும்"
ஊரெல்லாம் செய்தி பரவி விட்டது. ‘சோமாசிமாறனார் நடத்தும் யாகத்திற்கு ஈசன் வருகிறாராம். சுந்தரர் வாக்கு கொடுத்திருக்கிறாராம்.’
****
திருவம்பர் திருமாகாளம் விழாக் கோலம் பூண்டு விட்டது. எல்லா ஊரிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என பெருங்கூட்டம். யாகம் விமரிசையாக நடந்து பூர்ண ஆகுதி நேரம்.
யாகசாலை வாசலில் திடீரென ஒரு பரபரப்பு.
"ஓடுங்கள்.. இடம் அசுத்தமாகி விட்டது.. ஓடுங்கள்"
கூக்குரல் எழுந்தது. வேதியர்கள் வெளியே ஓடினார்கள்.
‘என்ன குழப்பம்..?’ சோமாசி மாறனார், மனைவி சுசீலா அம்மையாரைப் பார்க்க, அவர் சொன்னார். "வாசலில் இறந்த கன்றைச் சுமந்து நாய்களுடன் ஒருவர் வந்திருக்கிறார். அவருடன் அவர் மனைவி, இரு பிள்ளைகளும். மனைவி தலையில் மதுக்குடம் வேறு.. வேதியர்கள் அஞ்சுகிறார்கள் சுத்தம் பறிபோனதாய்.."
சோமாசிமாறனார் எழுந்து வெளியே வந்தார். எதிரே சுசீலா சொன்னது போலவே காட்சி. ‘இறைவா இது என்ன சோதனை.. சுந்தரர் வாக்கு பொய்யானதா.. யாகம் அரைகுறையாய் முடிந்ததா.. என் மனக் குறை தீராதா..’
கண்ணீர் பெருகியது மளமளவென்று. தடுமாறி கீழே சரியப் போனார். தாங்கிப் பிடித்தான் வாசலில் வந்த இரு பிள்ளைகளில் சற்றே பருத்த பிள்ளை.
"மாறா.. கவலை வேண்டாம்.. நன்றாகப் பார்.."
அவன் தொட்டதும் நம்பிக்கை துளிர்த்தது நெஞ்சில். கை பட்ட இடம் தும்பிக்கை தெரிந்தது அவர் கண்ணில்.
"விநாயகா.. வேழ முகத்தோனே!"
"எதிரே பார்.. அம்மையப்பன்தான் உனக்கருள வந்திருக்கிறார்.."
சுசீலாவுடன் தாள் பணிந்து தொழுதார் சோமாசி மாறனார். தம் கையாலேயே ஈசனுக்கு அவிர்ப்பாகமும் தந்தார்.
போட்டிருந்த வேடம் கலைத்து எம்பிரானும் பார்வதி சமேதரராய்க் காட்சி தந்தார். உடன் பிள்ளையாரும், முருகப்பெருமானும்.
தூதுவளைக் கீரையால் சுந்தரர் அன்பைப் பெற்று சோமாசிமாறன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராய் ஆனார்.


வைணவத்தில் தூதுவளை 

ஆளவந்தார்

ஆளவந்தார் அரசப் போகத்தில் திளைத்து வழிபிறழ்வதை உணர்ந்து வருத்தமுற்ற மணக்கால் நம்பி தன் குருவின் ஆணைப்படி ஆளவந்தாரை நல்வழிப்படுத்த அரசவைக்கு செல்லமுயன்றார். சாமான்யராக தென்பட்ட நம்பிகளை காவலர்கள் அனுமதிக்கவில்லை. ஆளவந்தாரை எவ்வாறாயினும் காணவிரும்பிய நம்பிகள் ஒரு திட்டமிட்டார். ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். அதனால் ஆளவந்தாரின் சமையற்கூடத்தில் பணிசெய்யும் சமயற்காரனிடம் நட்புக்கொண்டு அவன் வாயிலாக ஆறுமாத காலம் தூதுவளைக் கீரையை ஆளவந்தாரின் சமையற்கூடத்திற்கு தினமும் வழங்கிகொண்டிருந்தார். பிறகு நிறுத்திக்கொண்டார். சின்னாட்கள் கீரையை உணவில் காணாத அரசனான ஆளவந்தார் சமைப்பவர்களை கேட்க, அவர்கள் யாரோ ஒரு பெரியவர் தினமும் வந்து கொடுத்துக் கொண்டிருந்ததையும் தற்போது அவர் வராததையும் கூற, இதில் ஏதோ நுட்பம் இருப்பதை உணர்ந்த ஆளவந்தார் அடுத்த முறை அப்பெரியவர் வருவாறாயின் தம்மிடம் அழைத்துவருமாறு பணிக்க சேவகர்களும் அவ்வாறே செய்தனர்.நம்பியை நேரில்கண்ட ஆளவந்தார் உமக்கு என்ன வேண்டுமோ கேள் என வினவினார். நம்பி தாம் கொள்ள வரவில்லை என்றும், கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார். ஆளவந்தார் தருமாறு வேண்ட நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார். பின்னர்குருகை காவலப்பனிடமும் யோகசாத்திரங்கள் பயின்று அரச பதவியை துறந்து தன் கருணையால் வைணவ சமயத்திற்கு ஆளவந்தவரும் ஆனார்.


                                   

                                                      https://youtu.be/IluIo1Q1h7A



மன்னர் முதல் ஏழை வரை உண்ட உணவு, சத்தான சைவ உணவு, நாவுக்கு ருசி ஊட்டும் உணவு, உடலுக்கு தேவையான ஆற்றலை தரும் உணவு, நம் தமிழகத்தில் எங்கும் நிறைந்த உணவு ............................. அழிவின் விழிம்பில் உள்ள உணவு .... தூதுவளை கீரை உணவு .............


மூலிகைகளை பாதுகாப்போம் தமிழரின் பெருமையை மீட்போம் 



நன்றி தொடரும் 


3 comments:

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...