Sunday, 3 August 2025

ஆடாதொடை மணப்பாகு






அபயம் அளிக்கும் ஆடாதொடை மணப்பாகு 



ஆடாதொடை இருக்க பாடாத நாவும் பாடும் என்பது பழமொழி

அதாவது ஆடாதொடையை முறையாக பயன்படுத்திக் கொண்டால் குரல் வளம் மிகவும் இனிமையாக இருக்கும் அப்படி என்றால் தொண்டையில் எந்த ஒரு வகையான கபம் (சளி), அடைப்பான் (viral infection) போன்றவை இருக்காது என்பது அர்த்தம் 

நம் அகத்தியர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் இந்த ஆடாதொடை மணப்பாகானது கடந்த நான்கு வருடங்களாக தயாரிக்கப்பட்டு பல நூறு நபர்களுக்கு கொடுக்கப்பட்டு பயனளித்தது


இதன் பலனை பலர் கடல் தாண்டியும் அனுபவித்துள்ளனர். கொரோனா காலத்தில் இது கபம் கரைக்கும்  துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டது



நம் தயாரிப்பில் ஆடாதொடை மணப்பாகானது 16 மூலப் பொருட்களைக் கொண்டு காய்ச்சப்படுகிறது

அவற்றில் தயாரிக்கும் காலத்தில் எடுத்த சில புகைப்படங்களை இங்கு பதிவிட்டு இருக்கிறேன்

இங்கு பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்கள் அனைத்தும் முறையாக சாத்திர முறைப்படி சுத்தி செய்யப்பட்டே பயன்படுத்தப்பட்டவை







இது சளி மற்றும் கபத்தை கரைப்பதில் வல்லமை பெற்ற மருந்தாகவும்; காய்ச்சலுக்கு துணை மருந்தாகவும்; நுரையீரலில் இருக்கும் சளியை வெளிக்கொண்டுவரும் ஆற்றல் உடையதாகவும் பயன்படுகிறது. பொதுவாக இந்த மருத்துக்கு நாம் எடுத்துக் கொள்ளும் மூலிகை மற்றும் இதர கடை சரக்குகள்  ஆர்கானிக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

சிலேத்தும தேகிகள் யாவருக்கும் ஆடாதொடை மணப்பாகானது அவர்கள் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய அரணாக இருக்கும்.

இது குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவரும் பயன்படுத்த ஏற்றது










நம் வைத்திய  நிலையத்தில் ரூ.100 மற்றும் ரூ.300 ஆகிய இரண்டு விலைகளில் ஆடாதோடை மணப்பாகு கிடைக்கும்

மலிவு விலையில் மகத்தான மாற்றத்தைப் பார்க்கலாம்













அகத்தியர் சித்த வைத்திய ஆராய்ச்சி மையம் 
கோபிசெட்டிபாளையம் 9789475567


























No comments:

Post a Comment

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...