SIDDHARS APHRODISIAC
ADULTS ONLY
சித்தர்களின் பஞ்ச காமஊக்கிகள்
சித்தர்கள் அருளிய பஞ்ச காம ஊக்கிகள் (aphrodisiac foods)
இல்லறம் நல்லறம் ஆக சாதாரண கீரை உணவுகளை வைத்தே ஆண் பெண் இருபாலாருடைய சக்திகளை மேம்படுத்தும் முறைகள். இதை போன்ற பல பதிவுகளை இணையதளங்களில் பார்க்க முடிகிறது. இதுபோன்ற பதிவுகளில் பலமுறைகள் முழுமையாய் விளக்காததும் தவறான முறைகளாகவும் பார்க்க முடிகிறது. அனுபவம் இல்லாத பல drugs and foods மனித உடலுக்கு தீங்காகவும் விஷமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. சித்தர்கள் எழுதிய மருத்துவ முறைகளில் இதெற்கென குறிப்பிடும் பல மருந்துகள் இருக்கின்றன காமேஸ்வர லேகியம், மதன காமேஸ்வர குளிகை, லிங்க செந்தூரம், தம்பன மாத்திரை, வெள்ளி பஸ்ப செந்தூரம், தங்க பஸ்ப செந்தூரம், அய செந்தூரம் என நூற்றுக்கணக்கான மருந்துகள் உள்ளன. ஆயுர்வேதத்தில் வாஜீகரணம் (குதிரை போன்ற இந்திரிய பலம் உள்ளவன்) என்ற பெயரில் இதெற்கென மருந்து முறைகள், பழக்கவழக்கங்கள் என அத்தியாயங்கள் உள்ளன.
இங்கு இன்று நாம் பார்க்கப்போவது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய கீரையை வைத்து பயன்பெறும் முறைகளும் அதற்கான நம்பகமான சாட்சிகளும். எந்த சந்தேகமும் பயமும் இல்லாமல் இந்த முறைகளை பின்பற்றலாம். இதை போன்ற பதிவுகளை ஆபாச பதிவாகவோ கிசுகிசு ஆகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். (MATTERS FOR SEXUAL AWARENESS)
தாளி முருங்கைத் தழைதூது ளம்பசலை
வாளிலறு கீரையுநெய் வார்த்துண்ணி லாளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாங்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்
பொருள் : தாளிக்கீரை, முருங்கை கீரை, தூதுவளை கீரை, அறுகீரை,
பசலை கீரை இந்த இந்து கீரைகளையும் தினமும் மத்திய உணவில்
நெய்யோடு சேர்த்து தாளித்து வதக்கி அன்னத்தோடு சேர்த்து சாப்பிட்டு
வர வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வர மேற்சொன்ன பாட்டில் உள்ளது
போல பலன்கள் கிட்டும். இது சாதாரண இல்லறவாழ்க்கை
நடத்துவோர்களுக்கு பொருந்தும். அதிக பலவீனம் உடையவர்களாக
இருந்தால் இந்த முறைகள் பெரிய பலன் தராது. எந்த ஒரு முறையையும்
மிகை படுத்திக்கூறி மற்றவர் மனதில் பலவித எண்ணங்களை
உண்டாக்க கூடாது. எனவே பொருத்தமான விளக்கம் தந்துள்ளேன்.
மேற்கண்ட பாட்டில் யாழியை போன்று பலம் பெறுவான் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு மறை பொருள் உள்ளது. ஒரு ஆணின் பலத்தை இங்கு சித்தர் யாழி மிருகத்திற்கு ஒப்பிட்டுள்ளார். அதற்கு காரணம் யாழி மிருகம் சிங்க உருவம் சிங்க பலம் யானை துதிக்கையோடு உருவத்தில் யானையை விட பெரிய உருவமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.
ஆண் சிங்கம் பெண் சிங்கதோடு இணையும் பொது ஒரு நாளுக்கு 30 முறைகளுக்கு மேல் உடல் தொடர்பு வைத்துக்கொள்ளும். அந்த அளவுக்கு மேற்கண்ட கீரைகள் ஒரு ஆண்மகனுக்கு சக்தியளிக்கும் என்பதற்காக சித்தர்கள் இந்த வாஜீகரண உணவையும் அதன் பலனையும் யாழி மிருக பலத்திற்கு ஒப்பிட்டுள்ளார். இது விரைவில் குழந்தை வரம் அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இந்த உணவு முறைகள் வாஜீகரணதில் அடிப்படை ஆகும். வைத்திய முறைகளில் லேகியம், மாத்திரை, பஸ்பம், செந்தூரம் என பலவிதமான (aphrodisiac) முறைகள் உள்ளன. இது போன்ற முறைகளை அனைவராலும் அனுபவிக்க முடிவதில்லை காரணம் இவை எங்கு கிடைக்கும் எவ்வாறு இதுபோன்ற வாஜீகரண முறைகளை அடைவது என்ற சந்தேகம். நல்ல முறையில் சித்தவைத்தியம் செய்யும் வைத்தியர்களிடத்தில் இதுபோன்ற மருந்துகளை பெறலாம்.
இங்கு விளக்கப்பட்ட முறையில் கீரையை உண்ணும் போது கண்டிப்பாக நெய்யை சேர்த்துத்தான் உண்ண வேண்டும். நெய் சேர்க்காமல் உண்டால் எந்த பலனும் கண்டிப்பாக இருக்காது. நெய் மட்டுமே இந்த கீரைகளுடன் அனுபானமாக சென்றால் தாதுவிருத்தி, இந்திரிய (ஆண், பெண் சக்தி) விருத்தியை செய்யும். நான் படித்த ஒரு முகமதியர்களின் நூலில் முகமது ஸல் (நபிகள் நாயகம்) பசலை கீரையை அதிகம் உண்ணாதீர்கள் இதனால் ஆண்மை பலம் குன்றிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு தேரையர் பசலை சிங்கம் போல் பலம் ஏற்படும் என்று குறிப்பிடுகிறார் ஆனால் இதை நன்மை பெற எடுக்க வேண்டும் என்றால் நெய்யோடு உண்ணவேண்டும். நெய் இல்லாமல் இந்த கீரையை சேர்த்தால் நபிகள் நாயகம் கூறியது போல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ஒரே மூலிகை செய்யும் எதிர்மாறான செயல்கள் எனக்கு ஹோமியோபதியின் தத்துவமான LIKE CURE LIKE-யை நினைவுபடுத்துகிறது.
எந்த ஒரு கீரையும் உடலில் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும் அதை நெய்யோடு சேர்க்கும்போது உடலில் அதன் உஷ்ணம் சேராமல் நன்மையான பலன்களை மட்டுமே தரும். இங்கு கூறப்பட்ட ஐந்து கீரைகளும் உணவில் சேர்க்கப்படும்போது நெய்யோடு சேர்த்தால் மட்டுமே பலன் அளிக்கும்.
DR.ANBU GANAPATHI VIDEO
சித்தர்கள் நெறியும் சைவமும் மருத்துவமும் தோன்றி வளர்க்கப்பட்ட இந்த தமிழ்நாட்டில் வாழும் மக்கள் இல்லற வாழ்வில் எந்த ஒரு குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ நல்ல மனமுடனும், ஜீவகாருண்ய நிமித்தமாகவும் இந்த பதிவை வெளியிடுகிறேன். இதில் என்னால் இயன்ற வரை ஆபாசமில்லாமல் விளக்கமும் அதற்கான பொருத்தமான படங்களும் கொடுத்துள்ளேன்.
வாழ்க வளமுடன்
தொடரும்