Saturday, 27 April 2019

சிவன் திருமாலுக்கு சக்கராயுதம் கொடுத்தது

சிவன் திருமாலுக்கு சக்கராயுதம் கொடுத்தது



பாடல் : தேவாரம் 7 ஆம் திருமுறை 

பாடியவர் : சுந்தரர் 

பாடல் பெற்ற இடம் : ஆவடுதுறை 

இறைவன் : மாசிலாமணி நாதர், அதுல்ய குஜாம்பிகை  




சுந்தரர் தேவாரம் பாடல் 3

"திகழும் மாலவன் ஆயிர மலரால் 
          ஏத்துவான் ஒரு நீள்மலர் குறையப் 
புகழினால் அவன் கண்ணிடந் திடலும் 
          புரிந்து சக்கரங் கொடுத்தல் கண்டு அடியேன் 
திகழும் நின் திருப்பாதங்கள் பரவித் 
          தேவ தேவ நின் திறம்பல பிதற்றி 
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்தடைந்தேன் 
          ஆவடுதுறை ஆதி எம்மானே"


சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் நான்முகனின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். நான்முகன், அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து, அவன் திருமாலைக் குறிவைத்தான். திருமாலை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல திருமாலால் முடியவில்லை.

அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறைகைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.
சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.
இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார். அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்.
திருமாலின் சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும் அல்லவா !.


REFER FROM








தாமரைக்குப் பதில் கண்மலர் கொடுப்பது 

சிவபெருமான் திருமாலின் பக்திக்கு மகிழ்ந்து சக்கரம் கொடுப்பது 



 இறைவன் திருமாலுக்கு மீண்டும் கண்மலர் கொடுப்பது 



நன்றி 
தேவாரம் தொடரும் 

சிவன் சிலந்திக்கு அருளியது

சிவன் சிலந்திக்கு அருளியது 



பாடல் : தேவாரம் 7 ஆம் திருமுறை 

பாடியவர் : சுந்தரர் 

பாடல் பெற்ற இடம் : ஆவடுதுறை 

இறைவன் : மாசிலாமணி நாதர், அதுல்ய குஜாம்பிகை  





சுந்தரர் தேவாரம் பாடல் 2

"தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி 
          சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடையாய் அது தன்னைச் 
          சோழனாக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் 
புரண்டு வீழ்ந்து நின் பொன்மலர்ப் பாதம் 
          போற்றி போற்றி என்று அன்போடு புலம்பி 
அரண்டு என்மேல் வினைக்கு அஞ்சிவந்து அடைந்தேன் 
          ஆவடுதுறை ஆதி எம்மானே"

பொருள் 
சோழன் ஆக்கிய - சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.

ஆவடுதுறையில் சுந்தரர் பாடிய ஐந்து பாடல்கள் மட்டுமே தேவாரத்தில் உள்ளது. அந்த ஐந்து பாடலும் சிவபெருமானின் திருவிளையாடல்களை தெரிவிப்பதாகவே உள்ளது. இது இரண்டாவது பாடல். முதல் பாட்டில் மார்க்கண்டேயர் வரலாறு.. அடுத்தடுத்து இந்த தேவார பதிகங்களையும் படங்களுடன் காணலாம். அடுத்த தலைமுறைக்கு தேவாரத்தை விளக்கமாக எடுத்துச் செல்ல முயற்சி ....     

இந்த புராண கதையின் web link










நன்றி 

தேவாரம் தொடரும் 



மார்க்கண்டேயருக்கு அருளியது

மார்க்கண்டேயருக்கு அருளியது 


பாடல் : தேவாரம் 7 ஆம் திருமுறை 

பாடியவர் : சுந்தரர் 

பாடல் பெற்ற இடம் : ஆவடுதுறை 

இறைவன் : மாசிலாமணி நாதர், அதுல்ய குஜாம்பிகை  







பாடல் 1 
"மறையவன் ஒரு மாணி வந்தடைய 
        வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்தக் 
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் 
        கடந்த காரணங் கண்டு கண்டடியேன் 
இறைவன் எம் பெருமான் என்று எப்போதும் 
        ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து உன் 
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் 
        ஆவடுதுறை ஆதி எம்மானே "


பொருளுரை 
மறையவன் - மார்க்கண்டேயன்  
மாணி - பிரம்மச்சாரி 
வாரமாய் - அன்போடு 
கறைகொள் வேலுடை - ரத்தக்கறை பொருந்திய எம தருமனின் ஆயுதம் 
கடந்த - வென்ற 
அஞ்சலி செய்து - கும்பிட்டு 
அறைகொள் - ஜல் ஜல் என்ற சிலம்ப ஒலி பொருந்திய 




















தேவாரம் தொடரும் 




Friday, 5 April 2019

ஓரிதழ் தாமரை என்ற புருஷ ரத்தினம்

ஓரிதழ் தாமரை என்ற புருஷ ரத்தினம் 



படத்தில் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் மூலிகையின் பெயர் ஓரிதழ்தாமரை இதற்க்கு ரத்தினபுருஸ், சூரியகாந்தி என்று பல பெயர்கள் உள்ளது. ஒரே ஒரு அழகிய பன்னீர்பூ நிறத்தில் பூ உள்ளது இதனாலேயே இதற்க்கு ஓரிதழ் தாமரை என்று பெயர் பெற்றிருக்கிறது. இதைப்பற்றி பல அனுபவ வைத்தியர்கள் (PIONEERS OF SIDHA MEDICINE SYSTEM) கூறியதையும் சித்தர்களின் பாடல்களின் குறிப்புகளையும் வைத்து ஆதாரங்களுடன் இந்த பதிவை தருகிறேன் 

(ADULTS ONLY - ஓரிதழ் தாமரை SUPERIOR APHRODISIAC DRUG)

மூலிகை மணி கண்ணப்பரின் பதிவுகள் 
தாமரை என்ற பெயரைக் கண்டதும் இது நீரில் முளைக்கும் தாமரை தானோ? என்று நினைத்து விடாதீர்கள்! நீரில் மிதக்கும் தாமரை வேறு இந்த ஓரிதழ்தாமரை வேறு. இங்கு குறிப்பிடப்பட்ட தாமரை சிறு செடியினத்தைச் சார்ந்தது. கீழாநெல்லி, குப்பைமேனி, தும்பை செடிகளைப் போலவே மழை, பனி காலங்களில் வயல் வெளி, சதுப்பு நிலங்கள் அறுவடை செய்து விட்ட கரம்பு நிலங்களில் தன்னிச்சையாக வளரும். 

          
இந்த ஓரிதழ் தாமரைக்கு ரத்னபுருஸ் என்ற பெயரும் உண்டு. யுனானி வைத்தியர்களுக்கு ரத்னபுருஸ் என்று சொன்னால் தான் விளங்கும். இந்த ரத்னபுருஸ் ஏறக்குறைய 6 முதல் 9 அங்குலம் உயரம் வரையில் வளரும். இதன் இலைகள் தும்பை இலைகள் போலவே நீளமான இலைகளை உடையது. இலை கணுவிடம் ஒரு சிறிய இலையும், ஒரு பூ அரும்பு விடும். இந்த அரும்பு மலர்ந்து ஒரே இதழ் சுமார் மொச்சை பருப்பளவு விரிந்து தும்பை மலர் போல் கீழ்நோக்கி இருக்கும் பூவின் நிறம் ரோஜா நிறத்தை உடையது. பார்வைக்கு மிக அழகாக இருக்கும். இதழ் வாடி உதிந்ததும் காய் சுமார் ஒரு மிளகளவு பச்சை நிறமாக இருக்கும். காய் உதிர்ந்ததும் விதையாகி தன்னிச்சையாகவே இனத்தைப் பெருக்கிக்கொள்கிறது. இதுவே ஓரிதழ் தாமரையின் வளரியல்பு.            





யுனானி வைத்தியர்கள் இதனை வெகுவாக புகழ்ந்து பேசுவார்கள். "பாப் காயா சோ பேட்டா துரூஸ் ஓங்கா" என்பது யுனானி வைத்திய பழமொழி இதன் பொருள் யாதெனில் காளை வயதில் கட்டுக்கடங்காமல் காம நினைவுகளால் உடம்பைக் கெடுத்துக் கொண்ட பையனை "ரத்னபுருஸ்" மூலிகை கல்யாணத்துக்கு தகுதி உடையவனாக்கி வைக்கும் என்பதாம். எனவே இளம் வயதில் கிழட்டுத்தனம் ஆகிவிட்ட வாலிபர்களுக்கு எல்லாம் "ரத்னபுருஸ்" என்ற அறிய மூலிகை இயற்கை அன்னையால் அளிக்கப்பட்ட ஓர் வரப்பிரசாதம் என்றே கூறிவிடலாம்.




இது ஆண் பெண் என்ற இருபாலருடைய தாதுக்களையும் (TESTOSTERONE AND PROGESTERONE) வளர்க்கும் குணமுடையது. 

இந்த சிறு செடியின் வேர், இலை, காய், பூ யாவும் மருத்துவ பயனுடையதே. இதன் இலையை வாயிலிட்டு சுவைக்க குழகுழப்பாக இருக்கும். இந்த மூலிகையை தனித்தும் சாப்பிடலாம் மற்றும் பல மூலிகைகளுடன் கலந்தும் சாப்பிடலாம் (பாலில் சாப்பிடுவது சிறந்தது). பொதுவாக மேக ரோக நோய்களான தாது கெட்டிருத்தல், அதிமூத்திரம், வெட்டை சூடு, மேக வெட்டை, வெள்ளை வீழ்தல், மூத்திர தாரைகளில் எரிச்சல் முதலியவற்றைப் போக்கி உடலை பலப்படுத்தும். சிற்றின்ப பலவீனங்களை போக்கி தம்பதிகளின் உறவை பலப்படுத்துவதில் ஓரிதழ்தாமரை சிறந்த நண்பன்.

இதைப்பற்றி விளையாட்டுச் சித்தர் இப்படி கூறுவார்            

"காளை வயதில் கெட்டவனும்
          ஓரிதழ் தாமரை கண்டுண்ண
நாளைக்கே செய் மணம் என்பான்
          நலிந்தோர்க்கெல்லாம் நண்பனடா"

இலையை மட்டும் நாள்தோறும் அதிகாலையில் எடுத்து நீரில் அலசி சிறிதளவு வாயிலிட்டு நன்றாக மென்று தின்று பசும்பால் குடிக்க வேண்டும். இந்த சிகிச்சையை சூரிய உதயத்திற்க்கு முன்னதாக செய்தல் வேண்டும் என்பது சித்த மருத்துவ விதியாகும். இங்கனம் 25 முதல் 48 நாள் வரை அதற்கும் மேலும் தொடர்ந்து செய்து வரலாம். இதன் விசேஷ குணம் யாதெனில் வாலிப வயதிர்ற்கு முன்பே பல ஆண் பிள்ளைகள் பிஞ்சிலே பழுத்த பழங்களாகி இன்ப உணர்ச்சிகளுக்கு ஆளாகி கண்களையும் கருத்தையும் (PORNOGRAPHY - TEENAGE PROBLEMS) பறிகொடுத்து தனிமையில் இருக்கும் போதும் இரவில் படுக்கையில் புரளும் போதும் இக்குறிப்பிட்ட நினைவுகளால் சுய இன்ப (MASTRUBATION - நபும்சகம் என்ற அலித்தன்மை) பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள், இந்த வினையால் கண்கள் குழிவிழுந்து, கன்னங்கள் ஒட்டிப்போய் ஜீவ களையற்று பிரேத முகமும் எதையோ பறிகொடுத்தவன் போன்று மனதளவிலும், உடலளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பின் இச்செயல்களை விட்டால் கூட இதன் பின் விளைவுகள் பல ஆபத்தை விளைவிக்கின்றன. வெள்ளை படுதல், சொப்பன ஸ்கலிதம், உடல் மனம் பலவீனம், தேஜஸ் உடலொளி குறைதல், LACK OF CONFIDENCE AND VITAL FORCE என்ற பல வழிகளில் பாதிப்படைகிறான். இந்த குறிகள் அனைத்திற்கும் ஏற்றதொரு மூலிகை இரத்தின புரூஸ் என்ற ஓரிதழ்தாமரை. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இயற்கையாக விளைகிறது. 




   
தாதுவை பலப்படுத்தி உடல் உறுப்புகளை வலுப்பெறச் செய்து இழந்த வீரிய சக்தியை மீண்டும் உண்டாகச் செய்து முகப்பொலிவையும், அழகையும் தரும். இம்மூலிகையை பயன்படுத்தும் போது மனக்கட்டுப்பாடும் வைராக்கியமும், தெய்வ சிந்தனை வழிபாடுகளில் மனதை ஈடுபடுத்தி கொள்வது தான் செய்த தீய வினைகளுக்கு பிராயச்சித்தம் போலாவதுடன் மீண்டும் மட்டகரமான உணர்வுகளை தட்டி எழுப்பாமல் ஒழுக்கமான இல்லற வாழ்க்கைக்கு ஏற்றவனாக்கிக் கொள்ளலாம். இந்த மூலிகை பசுமையாக தினம் தோறும் கிடைக்க வழி இல்லாதவர்கள் மொத்தமாக சேகரித்து நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து தினம் இருவேளை பசும்பாலுடன் உட்கொண்டு பலன் பெறலாம்.

அகத்தியர் 


"தாதுவை உண்டாக்கும் தனிமேகம் தொலைக்கும் ஆதரவாம் மேனிக்கு அழகு தரும் சீதம்போம்சீரிதல் தாமரை வாழ் செய்ய மடவனமே ஓரிதழ் தாமரையை உண்"   


  இதைப்பற்றி இன்னும் பல விஷயங்களை எழுத முடியும் ஆனால் காலதாமதம் ஆகும் என இத்துடன் முடிக்கிறேன். இது தன் வளரும் இடத்தை பொறுத்து பல வகைப்படும். அதன் பூ பல நிறங்களிலும் உள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் ரோஸ் நிறத்திலும், ஊதா நிறத்திலும், சிகப்பு நிறத்திலுமான ஓரிதழ்தாமரை எங்கும் வளர்கிறது. என்ன VIEWERS ஓரிதல்தாமரையை தேட ஆரம்பிச்சிட்டீங்களா......... இதன் பலன் பெற என் வாழ்த்துக்கள் .... நன்றி விரைவில் மீண்டும் சந்திப்போம்    

நம் BLOG - ல் இதை போன்ற பதிவுகளை ஆபாச பதிவுகளாக எடுத்துக்கொள்ளாமல் AWARENESS பதிவுகளாக எடுத்துக்கொள்ளுங்கள் VIEWERS...................
   



         



 





ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...