Saturday, 26 January 2019

வசம்பு - பிள்ளை வளர்த்தி



வசம்பு - பிள்ளை வளர்த்தி 

போலியோ சொட்டுமருந்து இல்லாத காலத்தில் பிறந்த குழந்தைகள் நூறு வயது வரை ஆரோக்கியமாகத்தான் இருந்திருக்கிறார்கள் இன்றய நம் தாத்தா பாட்டிகள். அந்த காலத்தில் சித்த வைத்திய பிரிவில் பாலர் சிகிச்சை என்ற தனி மருத்துவ பகுதியே இருந்தது. அதில் பாலகுடோரி, பாலசஞ்சீவி, கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை இன்னும் ஏராளமான மருந்துகள் வழக்கத்தில் இருந்துவந்தன. 


அல்லோபதி (English medicine) வருகைக்கு பின் குழந்தைகளுக்கு ஊசி, சிரப், டேப்ளெட்ஸ் என ஆங்கில மருந்துகள் பரவலால் குழந்தை வாகடம், வாலை வாகடம் என்ற நம் மருந்துகள் அழிந்து வருகின்றன. இன்னும் முழுதாக அழியவில்லை இன்றும் நான் என்னிடம் வரும் தாய்மார்களுக்கு பாலகுடோரி, பாலசஞ்சீவி, கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை மற்றும் வசம்பு பிரயோகம் போன்றவற்றை வழங்கித்தான் வருகிறேன். அந்த குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியம் மற்றும் நோய்எதிர்ப்பு தன்மையோடு உள்ளதை அனுபவ ரீதியாக பார்த்திருக்கிறேன்.         




இந்த பதிவில் வசம்பை பயன்படுத்தி குழந்தை வளர்க்கும் முறையை பதிவிடுகிறேன். இது மூலிகை மணி கண்ணப்பர் அனுபவ ரீதியான முறைகள். சந்தேகம் அற்ற நிச்சயப்படுத்தப்பட்ட மருந்து (proof drug). இங்கு வசம்பை சுத்தி செய்யும் முறை சொல்லவில்லை கண்டிப்பாக வசம்பை பயன்படுத்தும் முன் அதை சுத்தி செய்ய வேண்டும். அதாவது சுத்தி என்றால் PURIFICATION. அதன் முறையையும் இங்கு பதிவிடுகிறேன். சுத்தி செய்யாத வசம்பு பயன்படுத்த கூடாது. சுத்தி செய்த வசம்பு என்னிடம் கிடைக்கும் தேவைப்படுவோர் இறுதியில் தரப்பட்டிருக்கும் என் மொபைல் எண்ணை அழைக்கவும் (FOR THE PURPOSE OF MARKETING AND SALES). முடிந்தவர்கள் வீட்டிலேயே சுத்தி செய்துகொள்ளலாம். 

வசம்பு சுத்தி முறை    
வசம்பை இரண்டு சென்டிமீட்டர் நீளமுள்ளதாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் வெட்டிய வசம்பு துண்டுகளை போட்டு இரண்டு டீஸ்பூன் நெய் விடவும் அதை  வைத்து 10 நிமிடம் வேவிக்கவும். பின் அடுப்பில்  இருந்து இறக்கி ஆரவைக்கவும். பின் வசம்பு துண்டுகளை கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். வசம்பு நெய்ப்பசையுடன் வறண்டு இருக்கவேண்டும் ஆனால் அதிக நெய்யால் சொதசொதப்பாகவும் இருக்கக்கூடாது. இந்த வசம்பை வேண்டிய நேரங்களில் கீழே கொடுக்கப்பட்டவாறு கல்லில் உரைத்தும் குழந்தைக்கு வார்க்கலாம். குழந்தைக்கு பேதி காணும் நேரத்தில் சுத்தி செய்த வசம்பை நெருப்பில் காட்டி கருக்கி அதன் சாம்பல் ஒரு சிட்டிகை உடன் தேன் கலந்து வார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்ட வசம்பு பற்றிய பக்கங்களை முழுவதும் படித்து விட்டு அதற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.     


சுத்தி செய்த வசம்பு 



குழந்தைகளுக்கு வசம்பு தருவதை பற்றி வீட்டில் உள்ள பெரியவர்களின் யோசனைகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் சிட்டிகை அளவு பயன்படுத்தலாம்.  குழந்தை பிறந்த 5, 6 மாதத்தின் தொடக்கத்திலேயே கொடுக்க ஆரம்பிக்கலாம். கூடுமானவரை  குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது வசம்பு நன்கு தீயில் சுட்டு சாம்பல் கங்கு வெண்ணிறம் அடைந்து இருக்கும் அதில் ஒரு சிட்டிகையை வாரத்திற்கு 3 வேளை வரை கொடுக்கலாம். (சுத்தி செய்த வசம்பு). TO IMPROVE THE CHILDREN VITALITY  













































பாலகுடோரி, பாலசஞ்சீவி, கோரோசனை மாத்திரை, 

கஸ்தூரி மாத்திரை தேவைப்படுபவர்கள் கீழே உள்ள 

எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் 






















3 comments:

  1. Vallga pallandu vallga vallamudan

    ReplyDelete
  2. வசம்பை தேய்த்து வாயில் வைத்தால் பேச்சுவராத குழந்தைக்கும் பேச்சுவரும் என எனது தாயார் அடிக்கடி கூறுவார்கள்

    ReplyDelete

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...