கோளும் நாளும்
இறுதி பகுதி
பஞ்சபட்சி சாத்திரம்
சாத்திரங்கள் என்பவை அக்கால முனிவர்களும், ரிஷிகளும், இருடிகளும், தேவர்களும், தெய்வங்களும் மனிதனுக்கு விட்டுச் சென்ற அறிவியல். இது நூல் (ஓலைச்சுவடி) வாயிலாக எங்கும் பரவியது. அதில் வானியல் சாத்திரம், மருத்துவ சாத்திரம், கணிதம், பூமிவளம், கலைகள் (ஓவியம், நடனம், சிற்பம், இசை இன்னும் பல), அஷ்ட கர்ம வித்தைகள் (மாந்திரிகம்) இதைப்போன்ற எண்ணிலடங்கா சாத்திரங்கள் இயற்றப்பட்டன. இவை பெரும்பாலும் தமிழ், சமஸ்கிருதம், அரபி மொழிகளில் இருந்தன. இயற்கை சீற்றங்கள், வெளிநாட்டவர் படையெடுப்பு, மத கலவரங்கள், ஆங்கிலேயர்கள் சுரண்டல்கள், கொள்ளை, சுயநலம் என பல காரணங்களினால் எண்ணில் அடங்கா சாத்திர ஓலைச்சுவடிகள் அழிந்தன. இன்று கன்னிமாரா நூலகம், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால், திருவனந்தபுரம், டெல்லி போன்ற இடங்களில் உள்ள காப்பகங்களில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகள் அழிந்தவைகளின் தொட்சமே. நாம் அவற்றில் தவறவிட்ட TECHNOLOGY AND SCIENCE பல. ஒவ்வொரு ஓலைச்சுவடிகளும் எப்படி அழிந்தன என்பது தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் சுயசரிதையை பார்த்தால் தெரியும்.
அவ்வாறு இயற்றப்பட்ட சாத்திரங்களில் தலைமையானது, அழிவின் விழிம்பில் உள்ளது, அனைத்திலும் உயர்ந்த சத்திரம் என புகழும் பஞ்சபட்சி சாத்திரம் ஆகும். இந்த சாத்திரத்திற்கு இணையானது வேறெதுவுமில்லை. இந்த சாத்திரம் சிவபெருமான் உமாதேவிக்கு உபதேசித்து, உமா தேவியிடம் இருந்து சித்தர்களுக்கு உபதேசிக்கப்பட்டது என்று இந்த நூலின் வாயிலாகத் தெரிகிறது. இது ஒரு வித்தை என்றுகூட கூறலாம். இதனால் நன்மை தீமை என எவையும் செய்ய முடியும். காலத்தை நமக்கு சாதகமாக்கிக் கொள்வது பற்றிய சாத்திரம் தான் பஞ்சபட்சி சாத்திரம் எனப்படும். இன்றைய காலத்தில் இதை பற்றி 10 % தெரிந்தவர்கள் கூட யாரும் இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது. இந்த சாத்திரம் மூன்று பெரும் பிரிவுகளை உடையது என கூறலாம். அவை
காலகணிதம்
ஜோதிடம்
மாந்திரீகம் (அஷ்ட கர்ம வித்தைகள்)
"ஆதியென்ற பஞ்சபட்சி அறிந்தோன் ஐயா
அவன் சித்தன் அவன் யோகி அவனே வாதி
சோதியென்ற மனோன் மணிக்குச் சிவனார் சொன்னார்
தொல்புவியில் பெண்மதியாற் புலம்பினாள் பார்
வாதியென்ற பேரு பெற்றோர் அறிய வேண்டு
மகத்தான வித்தை எல்லாம் வசமே ஆகும்
பாதியென்ற ரவிமதியு முன்பின்னாகப்
பாடினார் அதை அறிந்து பார்த்துச் சொல்லே"
பஞ்சபட்சி சாத்திரத்தில் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என ஐந்து பறவைகளைக் கொண்டு காலத்தை ஐந்தாகப் பிரித்து, அதில் ஒருகாலத்தை எடுத்து அதை மீண்டும் ஐந்தாகப் பிரித்து பலன் சொல்லப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பறவையும் ஒரு நாளில் ஐந்து தொழில்களைச் செய்கின்றன அவை அரசு (ஆட்சி செய்தல்), ஊன் (உணவு உண்ணுதல்), நடை (நடந்து உலாவுதல்), துயில் (தூங்குதல்), சாவு (இறந்துவிடுதல்) இவ்வாறு ஐந்து தோழிகளும் ஒரு நாளில் பகல் பொழுது இரவு பொழுது என இரு முறை நடக்கும். இந்த காலகட்டத்தை தெரிந்து நடந்தால் அவனுக்கு தோல்வி என்பதே கிடையாது என்பது சாத்திர நிச்சயம். இது ஒரு பெருங்கடல் என்பதால் பலரும் இதை அறிய முற்படவில்லை. பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரகாலத்தை விட பஞ்சபட்சியே உயர்ந்தது என பல ஆதாரங்கள் உள்ளன.
அனைத்து நேரமும் பஞ்சாங்கத்தின் படி நன்றாக இருந்தாலும் அவன் பட்சி நேரம் சரியில்லை எனில் எடுத்த காரியம் கெடும் அல்லது விரைவில் நஷ்டப்படும்.
அனைத்து நேரமும் பஞ்சாங்கத்தின் படி சரியில்லாமல் இருந்தாலும் பஞ்சபட்சி அறிந்த ஒருவன் பட்சியை வைத்து ஒரு காலத்தில் காரியத்தை செய்ய முற்படின் எடுத்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும், பொருள் வரத்தும் லாபமும் மேன்மேலும் பெருகும்.
இந்த சாத்திரம் பற்றி மிக குறைவான ஆதாரங்களே உள்ளன. இது சித்தர்களால் போதிக்கப்பட்டாலும் பலவகையாலும் மறைக்கப்பட்டது. இது தீயவர்கள் கையில் அகப்பட்டால் மற்றவர்களுக்கு அழிவு ஏற்படும் என்று அவர்கள் கருதியிருக்கலாம். இதைப் பற்றிய அவர்கள் எழுதிய கவிகளோடு வண்ணமயமாய் படித்துப் பாருங்கள். எனக்குத் தெரிந்தவரை இதில் அறிமுகத்தை மட்டும் கூறியுள்ளேன். POEM FORMஇல் உள்ள கவிகளுக்கு விளக்கம் தேவை இல்லை புரியும் அளவுக்கு எளிதான தமிழாக உள்ளதால் இங்கு பாடல்களுக்கு விளக்கம் கூறவில்லை.

ஐந்து பறவைகளை வைத்து, காலத்தை ஐந்தாய் பிரித்து காலகணிதம் இயற்றப்பட்டிருக்கிறது. இது யாருக்கும் உபதேசிக்கக்கூடாது என்றும் கவிகளில் கூறப்பட்டுள்ளது. இதைப்பற்றி ஒரு அறிமுகத்தை உங்களுக்குத் தருவதில் நான் பெருமை அடைகிறேன்.