Tuesday, 12 March 2019

கோளும் நாளும் PART - III

கோளும் நாளும் 
பகுதி - 3 

இந்த பகுதியில் சவரம் எனப்படும் முடி திருத்தம் அல்லது சிகை திருத்தம் என்ற விஷயத்தைப் பற்றி ஆராய்வோம். ஜோதிடத்தில் உடலில் உள்ள முடிகளுக்கு காரகன் சுக்கிரன் (VENUS) என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அதற்க்கு ஆதாரத்தைக் கண்டதில்லை. பொதுவாக விடுமுறை நாள்களில் அல்லது அளவுக்கு மீறி முடி அல்லது தாடி வந்தால் தான் நாம் சிகையை திருத்தம் செய்வோம். ஆனால் சாஸ்திரத்தில் அதற்குக் கூட கால நேரம் கூறியிருக்கிறார்கள். காரணம் உரோமம் என்பது மனிதனைக் காக்கும் ஒரு LAYER ஆகும். இந்த சிகை திருத்தத்திற்க்கும் கோள்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் உண்டு. 



    
என் மாணவர்களுக்கு ANTI-STATIC FINISH AND UV RESISTANCE FINISH என்ற பாடம் நடத்துகையில் ஒவ்வொரு முறையும் இந்த உரோமங்களின் காரணத்தையும், மனித தேகத்தில் கடவுள் உரோமத்தை உண்டாக்கியதின் நோக்கத்தையும் கூறுவதுண்டு. HUMAN HAIR ஒரு குறை மின்கடத்தி  புறஊதா கதிர்களிடம் இருந்தும், MINUTE FREE ELECTRONS இடம் இருந்தும் மனிதனை பாதுகாக்கின்றன. மனிதனின் தோலில் உள்ள அடுக்குகள் (SKIN LAYERS) ஆங்கில உடல்தத்துவ முறைப்படி மூன்றாகவும், ஆயுர்வேத முறைப்படி ஏழாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.  

மனித உடலில் உள்ள வியர்வை துவாரங்களின் எண்ணிக்கை மூன்று கோடி, இந்த துவாரங்கள் பெரும்பாலும் ஈரப்பதத்துடன் தான் இருக்கும் இதன் வழியாக FREE ELECTRONS எளிதாக நுழைய முடியும். அவ்வாறு ELECTRONS மனித தேகத்திற்குள் நுழைந்தால் என்ன ஆகும். மரபணுவில்(DNA) மாற்றம் அல்லது பாதிப்பு ஏற்படும்.  CANCER என்ற வளர்ச்சிதை மாற்றம் ஆன திசுக்கள் பெரிதாக வளர்கிறது (கட்டிகள்). எனவே CANCER அதிகமாக மனிதனை தாக்குவதற்க்கு இதுவும் ஒரு காரணம். FOREIGNERS பெரும்பாலும் WAXING என்ற முறை மூலம் உடலில் உள்ள அனைத்து உரோமங்களையும் நீக்கிவிடுகின்றனர் இதுவே இவர்களுக்கு எமனாக மாறுகிறது, இவர்களுக்குத்தான் புற்று நோய் அபாயம் அதிகமாக உள்ளது. இதற்க்கு முக்கிய காரணம் மனிதனின் ஒரு PROTECTION LAYER ஆன உரோமங்களை முழுவதுமாக நீக்குதல். 

சூரிய ஒளியில் இருந்துவரும் புறஊதா கதிர்கள் (MINUTE ELECTRONS) அல்லது வேலை செய்யும் இடத்தில் உள்ள உபகரணங்களில் உருவாகும் EMF (UNSEEN FREE ELECTRONS) போன்றவற்றை நம் உரோமம் வாங்கிக்கொண்டு நம் BODY LAYER க்குள் நுழைய விடுவதில்லை. முடி ஒரு POOR CONDUCTOR என்பதால் அவை  ELECTRONSஐ SCATTER செய்கிறது இதனால் மனித உடலில் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. எனவே கடவுள் மனித தேகத்தில் காரணத்தோடு தான் உரோமங்களைப் படைத்துள்ளார். ஞானிகளும் UV RAYS, ALPHA BETA KAMA RAYS பற்றி நன்கு அறிவார்கள் ஒரு ஞானியின் பதிவில் கதிர்கள் மனித இனத்திற்கு அபாயம் என்பதை கூறுகிறார்.      
கற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டும்என்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலநீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே. 




   

இனி சிகை திருத்தத்திற்கு வருவோம். கோளும் நாளும் முதல் பதிவில் நாள்களுக்கான விசேஷம் பற்றி கூறுகையில் "புகர் மயிர் கழிக்க" என்ற வாக்கியம் வரும் அதாவது SHAVING, CUTTING, WAXING செய்ய ஏற்ற நாள் வெள்ளிக்கிழமை என்று, ஆனால் இதிலும் ஒரு குறை இருப்பதாகவும் முடி திருத்திக் கொள்ள ஏற்ற நாள் திங்கள் மற்றும் புதன் கிழமைகள் என்று கைலாசநாதர் சதகம் என்ற நூல் கூறுகிறது.   



சவரம் செய்ய ஏற்ற நாள் 

"சேருமுத்திர நான்கும் பூசபுனர் பூசமுந்
          நிகழு முத் ராட நான்குஞ் 
செய்யமான் றலை உத்திரட்டாதி மூன்றுமாந் 
         திதி தசமி நன்றதாகும் 
மாரிவரு துதிகை திருதிகை யினோடு பஞ்சமி
         வளர்கின்ற சப்தமியுமே 
வகுக்குந் த்ரயோதசி துவாதசி மதி புதன் 
          மயிர் கழித் திடுத நன்றாம் 
பாருலகில் வைகாசி ஆணி ஆவணி கார்த்தி
          கைதைபங் குனி தன்னிலே 
பண்புதரு சவரமது செய்துகொள வேயஷ்ட
          பாக்கியங்கள் மேன்மேலுறுங்
காருலவு சோலையோடு சிகரநெடு மலைகள்சூழ்
          கற்பக விராச மேவுங்
கங்கைபுனை ஈசனே மங்கை மகிழ் நேசனே 
          கைலயங் கிரிவாசனே"
                                                    - கைலாசநாதர் சதகம்

பொருள் :
சவரம் செய்ய ஏற்ற நாள்கள் 
நாள் : திங்கள்கிழமை, புதன்கிழமை  
திதி  : தசமி, துதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, திரயோதசி, துவாதசி
நட்சத்திரம் : உத்திரம், பூசம், புனர்பூசம், உத்திராடம், மிருகசீரிடம், உத்திரட்டாதி 
மாதம் : வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை,தை, பங்குனி               

இந்திந்த நாள்களில் சவரம் செய்ய பாக்கியங்கள் எய்தும் என கூறுகிறார்கள். திங்கள் புதனை முதலாகக் கொண்டு சவரம் செய்யவும். நாள் தான் முக்கியம். 

    



சவரம் செய்ய ஆகாத நாள்

"ஆடி மார்கழி மாசி கன்னி மாதந்தனி 
          லாஞ்செல்வ மது நீங்கிவிடு 
மறுக்கனு யிரழிவாகு மனைவி பொருள் சேதமா 
          மான குரு மான சேதம் 
நாடி வரும் சுக்ர வாரத்துடற் பலவீன 
          நவில் சனிக் கெவையு நாச 
நவமிதன நஷ்டமாஞ் சதுர்த்தி தாய்க் காகாது 
          நற்சஷ்டி பிதுர் சாபமாஞ் 
சாடிவரு சதுர்தசியிற் சோதரர்க் காகாது
          தன் மனைவி போமஷ்டமி 
சாற்று செவ்வாய் நாயி றெண் மதித் தொடமாஞ் 
          சனிகுருவி னுக்கிடரதாங் 
காடுமலை யாவுமகில் சூழுமிட மெனவீறு
         கற்பக விராச மேவுங்
கங்கைபுனை ஈசனே மங்கை மகிழ் நேசனே 
          கைலயங் கிரிவாசனே"
                                                    - கைலாசநாதர் சதகம்

பொருள் :
இந்திந்த நாள்களில் சவரம் செய்தால் இந்திந்த துன்பங்கள் உண்டாகும். 
நாள் : ஞாயிறு - உயிருக்கு அழிவு வரும், மனைவி பொருள் சேதமாகும்;
செவ்வாய் - எண் மதி தோஷம் ?, நாயினேன் ? (பொருள் புரியவில்லை) ;
வியாழன் - மானம் போகும்; 
வெள்ளி - உடல் பலவீனம் ஆகும் (இங்கு ஜோதிட கணிதாமிர்தம் நூலுக்கு பேதமாக உள்ளது, என் கருத்து கைலாசநாதர் சதகத்திற்க்கே முன்மதிப்பு அளிப்பேன்);
சனிக்கிழமை - அனைத்து நலன்களும் நாசமாகும். 

திதி : நவமி - செல்வ நஷ்டம்;
சதுர்த்தி -  தாய்க்கு கேடு வரும்;
சஷ்டி - பிதுர் சாபம்- தந்தை வழி உள்ளவர்கள் சாபம் வரும்;
சதுர்த்தசி  - சோதரர்க்கு ஆகாது (புத்திரர் அல்லது சகோதரர்களுக்கு ஆகாது);
அஷ்டமி - மனைவி உன்னை விட்டு நீங்குவாள்;
    
நட்சத்திரம் : இக்கவியில் நட்சத்திரம் சவரத்திர்ற்கு விலக்காக வரவில்லை. 

மாதம் : ஆடி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதம் மயிர் கழிக்க செல்வம் நீங்கும்.     

(இந்த கெடு பலன்கள் பொதுவானதால், ஜாதகரின் மற்ற திசை புக்தி ஒப்புநோக்குகையில் சேதங்கள் குறைவாகவும் மிகையாகவும் மாறிமாறி வரும். இந்நேரங்களில் இவை தவிர்க்கவும் என்பது ஒரு சிவனடியாரின் (கைலாசநாதர் சதக ஆசிரியர்) உபதேசம் ஏற்பதும், தவிர்ப்பதும் அவரவர் பக்குவ நிலை)





இந்த சிகை திருத்தம் நம் பாரதத்தில் இல்லற வாசிகளுக்காகவே ஒதுக்கப்பட்டது, ஞானிகளும் யோகிகளும் சவரம் செய்ய மாட்டார்கள். இங்கு கூறப்பட்டுள்ள CRITERIA அனைத்தும் 21th CENTURY மக்களுக்கு SUITABLE ஆனதா என்று சிந்தித்தால் நாத்திகம் பேசுபவர்கள், பகுத்தறிவு பேசும் மக்களிடையே இந்த கருத்துக்களுக்கு கண்டிப்பாக எதிர்ப்பு வரும். காலம் நேரம் கோள்கள் (நவகிரகங்கள்) இவற்றின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் இதை ஒதுக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். சவரம் செய்ய ATLEAST புதன் மற்றும் திங்கள் கிழமையை பின்பற்றுங்கள். இது அனைத்தும் என் கருத்து அல்ல, நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற நூல்களின் உபதேசங்கள்.         


சவரத்தின் பலன் 

"தூக்கம் விரணம் தொடைவலி சூலங்காசந்
தற்கால சாந்தஞ் சவரத்தால் மிக்குடற்க்குச்  
சாந்தி மனப் பூரிப்பு கண்ணொளிரு காமமுமாஞ் 
சேர்ந்ததிங்க ளுக்கிரண்டாந் தேர்"




இன்றைய பதிவில் அளவுக்கு மீறி சிரைத்து விட்டோம் இனி நாளும் கோளும் பதிவை அடுத்த பதிவில் புது பொலிவுடன், புத்தாடையுடன் தொடர்வோம். இந்த நாளும் கோளும் கட்டுரையின் இறுதி பாகம் சிரோரத்தினமான ஒரு கால கணிதத்தைப் பற்றிய அறிமுகம் உங்களுக்காக காத்துள்ளது.  


நாளும் கோளும் பகுதி - 4 
விரைவில் 




No comments:

Post a Comment

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...