Friday, 15 March 2019

கோளும் நாளும் PART - IV

கோளும் நாளும் 
பகுதி - 4



நம்மிடம் உள்ள துணிகளில் சில துணிகள் மிகவும் அதிர்ஷ்டமானது அல்லது சில துணிகள் துரதிர்ஷ்டம் ஆனது. அதாவது  அதிர்ஷ்டமான துணிகளை அணியும் போது நமக்குப் பிடித்த நிகழ்வுகளும், ஆதாயமும் கிடைக்கலாம், துரதிர்ஷ்டமான துணிகளை அணியும் போது அந்நாள் முழுவதும் வேலைப்பளு, தலைவலி, சண்டை சச்சரவுகள், கடுப்பு என பல நிகழ்வுகளை ஏற்படுத்தலாம். அப்படி ஏதேனும் நீங்கள் உணர்ந்ததுண்டா ?   நான் பலமுறை இதை அனுபவித்துள்ளேன். காரணம் என்னவாக இருக்கும். 



அதே போல் ஒருசில துணிகளை அடிக்கடி அணிய பிடிக்கும் காரணம் ஏதுவாகவேணாலும் ( FITNESS, COLOR ETC ) இருக்கலாம். ஒரு சில துணிகளை வாங்கியதோடு ஒருமுறை அணிந்திருப்போம் மீண்டும் அணிய பிடிக்காது. இதற்க்கு ஜோதிட சாத்திரத்தில் சில காரணக்களை முன்வைக்கிறார்கள். அவைகள் உண்மைதானா என அனுபவத்தில் உணர்ந்து பார்த்தால் மட்டுமே உண்மை தெரியும்.      

புத்தாடை எடுத்தால் பிறந்தநாள், தீபாவளி, பொங்கல், திருமண விழா, கிறிஸ்துமஸ், ரம்ஜான் அல்லது வேறு ஏதேனும் ஒரு நிகழ்சிக்காக எடுப்போம். எந்த நாள் புத்தாடை எடுக்கலாம் அல்லது எந்த நாளில் அந்த ஆடையை முதலில் அணியலாம் என்று ஜோதிட சாத்திரங்களில் ஒரு வரைமுறை உள்ளது. இந்த பதிவில் அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

  

இரண்டு நூல்களில் புத்தாடை அணிய சரியான நாள்கள் எது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிட கணிதாமிர்தத்தில் உள்ளது :

"காரியில் அழுக்கதாகும் கதிரவர் பீடை காட்டும் 
மாரியில் நனையுந் திங்கள் வன்புதன் கந்தையாகும் 
வீரியமில்லை செவ்வாய் வெள்ளியில் மடந்தை சேர்வாள் 
கூறிய வியாழன் நன்றாம் குலவிய ஆடை சாத்தே"  

பொருள் : 
ஞாயிறு - பீடையாகும் 
திங்கள் - மழையில் நனையும், அடிக்கடி ஈரத்தில் நனையும் 
செவ்வாய் - வீரியம் போம் (தைரியத்தை குறைக்கும்)
புதன் - சீக்கிரம் துணி கந்தல் துணியாக மாறும் 
வியாழன் - நன்மை 
வெள்ளி - பெண் சேர்வாள் (நன்மை)
சனிக்கிழமை - துணி எப்பொழுதும் அழுக்காகும் 





மேற்கண்ட கருத்தை ஒட்டியே அறப்பளீஸ்வர சதகம் என்ற நூல் சொல்வனவற்றைப் பார்ப்போம். அறப்பளீஸ்வரர் (ஈஸ்வரர்) கோவில் கொல்லிமலையில் உள்ளது. 

"புத்தாடை ஒளிசேரும் ஆதிவாரம் தனில் கட்டலாம் 
          புதிய சீலை 
கலைமதிக்கு ஆகாது பலகாலும் மலையினில் கடிது நனைந்து 
          ஒழிவு தரும் 
குறைபடாது இடர் வரும் வீரியம் போம் அரிய 
          குருதி வாரம் தனக்கு
கொஞ்ச நாளிற் கிழியும் வெற்றிபோம் புந்தியினில்  
          குரு வாரம் மதில் அணிந்தால் 
மறைபடா அழகு உண்டு மேன்மேலும் நல்லாடை 
          வரும் இனிய சுக்கிரற்க்கோ  
வாழ்வுண்டு திருவுண்டு பொல்லாத சனிக்கிழமை 
          வாழ்வு போம் மரணம் உண்டாம் 
அறைகின்ற வேதாகமத்தின் வடிவாய் விளங்கு 
          அமலனே அருமை மதவேள் 
அனுதினமும் மனதில் நினைதருசதுர கிரிவளர்
          அறப்பளீஸ்வர தேவனே  " 

பொருள் : 
ஞாயிறு - ஒளி சேரும் (தேஜஸ் உண்டாகும்) 
திங்கள் - மழையில் நனையும், அடிக்கடி ஈரத்தில் நனையும் 
செவ்வாய் - வீரியம் போம் (தைரியத்தை குறைக்கும்)
புதன் - செய்யும் காரியம் தோல்வியாக மாறும் 
வியாழன் - அழகு உண்டாகும், மேன்மேலும் புதிய ஆடை சேரும்   
வெள்ளி - நன்மை உண்டு, செல்வம் உண்டு  
சனிக்கிழமை - துக்கமும் மரணமும் உண்டு  


மேற்கண்ட இரண்டு நூல்களையும் ஆராய்ந்தால் திங்கள், செவ்வாய், புதன், சனிக்கிழமை ஆகிய நான்கு நாட்களும் ஒரு புத்தாடையை வாங்கவோ முதலில் அணியவோ சாத்திர ரீதியாக குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இத்தினங்களை ஒதுக்கிக் கொள்வது சிறந்தது.

உதாரணமாக ஒருவருக்கு செவ்வாய் கிழமை பிறந்த தினமாக கொண்டால் அன்று புத்தாடை அணிய வேண்டுமே இது சாத்திர ரீதியாக எதிரானதே என்று முகம் சுழிக்க அவசியம் ஏதும் இல்லை. பிறந்த நாள் வரும் நாளுக்கு முன்பே வியாழன் அல்லது வெள்ளி கிழமைகளில் ஒருநாளில் புது துணியை வாங்கி அதை அந்த நாளிலேயே ஐந்து நிமிடங்கள் மட்டும் அணிந்திருந்து எடுத்துவைத்துக் கொள்ளலாம், பின் தன் பிறந்ததினம் செவ்வாய் அன்று முழுவதும் அணிந்து கொள்ளலாம்.      

இரண்டு நூல்களிலும் வியாழன், வெள்ளி புத்தாடை வாங்கவும், அணிந்துகொள்ளவும் உத்தமம் என்றுள்ளது. ஆனால் இரண்டு நூல்களையும் COMPARE செய்கையில் ஞாயிறு பேதப்பட்டுள்ளது. ஞாயிறு புத்தாடை அணிய ஒரு நூலில் நன்மை எனவும் மற்றொரு நூலில் தீமை எனவும் உள்ளது. இதைப்போலவே இத்தினமும் புத்தாடை அணிபவர்களுக்கு ஒருசிலருக்கு அனுகூலமாகவும் ஒரு சிலருக்கு பாதகமாகவும் அமையும் எனக்கொள்ளவேண்டும்.        



கோளும் நாளும் இன்றைய பதிவும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். அடுத்த பதிவுடன் கோளும் நாளும் கட்டுரை முடிவடைகிறது. அடுத்த பதிவில் மிகவும் அரிதான ஒரு சாத்திரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதை எண்ணி இப்போதே மகிழ்கிறேன். கோளும் நாளும் பகுதி ஐந்து மிகவிரைவில்.  
   
இந்த கோளும் நாளும் தொடர் உங்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அறிய ஆசை, இவை உபயோகமாக இருந்ததா? அல்லது பகுத்தறிவுக்கு அப்பார்பட்டதாக ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருந்ததா என்பதை தெரியப்படுத்த விரும்பினால் COMMEND இல் தெரியப்படுத்தவும்.  

எந்த ஒரு கண்டுபிடிப்பும் PROVE செய்ய வேண்டும். நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் PROVE செய்த இடம் செல்லரித்த ஓலைச் சுவடிகள் (ANTIQUE OLA MANUSCRIPTS ). 


"யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


வான்பற்றி நின்று மறைபொருள் சொல்லிடின் 


ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம் 


தான் பற்ற பற்ற தலைப்படும் தானே"


                                                                          -- திருமந்திரம் 






No comments:

Post a Comment

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...