Sunday, 10 March 2019

கோளும் நாளும் PART - II

கோளும் நாளும் 
பகுதி - 2

கடந்த பதிவில் நாள்களின் பொது பலனும், விருந்துண்ண ஏற்ற நாளைப்பற்றியும் பார்த்தோம். இந்த பதிவில் நாள்களின் விசேஷங்களைத் தொடர்வோம். கோளும் நாளும் தொடர் நான் செய்த plan படி 5 அல்லது 6 பகுதிகளாக பிரித்துப் போடலாம் என்று முடிவெடுத்துள்ளேன். பதிவின் இறுதியில் ஒரு FANTASTIC ஆன காலகணித முறையையும் அறிமுகப்படுத்த உள்ளேன்.    


கடந்து சென்ற GENERATION இல் நம் அப்பா அம்மா தாத்தா பாட்டி ஆகிய அனைவரும் மாதத்திற்க்கு ஒருமுறை அல்லது இருமுறை எண்ணெய் ஸ்நானம் (OIL BATHING) எடுக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் நம் GENERATION இல் இந்த பழக்கம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை என்று, எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் குறைந்து விட்டது.

இன்றெல்லாம் SHAMPOO மட்டுமே தலைக்கு தேய்த்து குளிக்கிறார்கள். அதுவும் எண்ணெய் ஸ்நானம் இல்லை, வெறும் தலைக்கு SHAMPOO, அதுவும் ஒருசிலர் தினமும் இதை வாடிக்கையாக பயன்படுத்துகின்றனர். அப்படி என்ன எண்ணெய் ஸ்நானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பும் MODERN YOUNGSTER களுக்கு இந்த எண்ணெய் ஸ்நானம் பற்றி அறிய வாய்ப்பு இல்லை தான். அதின் முக்கியத்துவமும் அதில் சம்பந்தமான கோள் (நவகிரகங்கள்) நிலையும் இந்த பதிவு நன்கு விளக்கும் என்று நம்புகிறேன்.      
  

எண்ணெய் தேய்த்து தலை மூழ்குவது பற்றி சித்த, ஆயுர்வேத சாத்திரங்கள் "நோய்களிடமிருந்து மனிதன் கவசம் போட்டுக்கொள்வதற்கு ஒப்பானது" என்று கூறுகிறது. வாரத்திற்கு ஒருமுறையேனும் அல்லது மாதத்திற்கு இரண்டு முறையேனும் புதன் மற்றும் சனிக்கிழமை களில் எண்ணெய் ஸ்நானம் செய்துவந்தால்  ஆயுள் கூடும், எந்த பிணியும் வராமல் உடலை பாதுகாக்கும் காரணம், "எண்சான் உடலுக்கு பிரதானம் சிரசே ஆகும்" சிரசில் உள்ள சுரப்பிகளே மனிதனின் உடல்நிலை, மனநிலை ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. இந்த சுரப்பிகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் எனில் எண்ணெய் ஸ்நானம் தவிர வேறு வழியில்லை, எனவே அகத்தியர், தேரையர், பாம்பாட்டி சித்தர், தன்வந்திரி போன்றோர் தைல வருக்கச் சுருக்கம் என்ற தனி நூலையே படைத்துள்ளனர். அதுபோக சுசுருத சம்கிதையில் - அத்யாயம் 24 இல் - உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் மேன்மை உண்டாகும், கப வாத நோய்கள் நீங்கும், தாதுக்கள் வலிமை பெரும், உடல் நிறமும் பொலிவும் பெரும், உடல் உஷ்ணம் நீங்கும், அழுகிய விந்து சுரோணிதங்கள் தூய்மை பெரும், உடல் இணைப்புகள் திடப்படும், சிரைகளின் முகம் மயிர்க்கால்கள் தமனிகள் முதலியவற்றின் வழியாக உடலை தணிவு பெறச் செய்து உடலுக்கு வலிமை தரும். 

வேரில் நீர் பாய்ச்சுவதால் மரம் எவ்வாறு முளைவிட்டு துளிர்த்து  வளர்கிறதோ அதைப் போல எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தாதுக்கள் நன்கு வளரும். 


இந்த எண்ணெய் ஸ்நானம் கண்டிப்பாக சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள நாளில் மட்டுமே எடுக்க வேண்டும். புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை. இதை கீழுள்ள பாடல்கள் மூலம் அறியலாம்.

"அருக்கன் எண்ணெய் அழகு அழிக்கும் 
     அணியாம் திங்கள் ஆகாது 
திருக்காஞ் செவ்வாய் உயிர் போக்கும்
     செய்ய புதர்க்குப் பொருளுண்டாம் 
கருத்தை அழிக்கும் கவின் வியாழன் 
     கைப்பொருள் போக்கும் கன வெள்ளி 
பெருக்க முண்டாம் சனிஎண்ணை 
     பேணி முழுக வல்லாரே" 

ஞாயிறு - உடலில் அழகு குறையும் 
திங்கள் - ஆகாது 
செவ்வாய் - உயிர் போக்கும் அளவுக்கு உடலில் நோயுண்டாம் 
புதன் - செல்வமுண்டாகும் 
வியாழன் - மனம் பாதிப்பு ஏற்படலாம் 
வெள்ளி - செல்வம் நீங்கும் 
சனிக்கிழமை - உடல் ஆரோக்யம் பெரும் 
  
சனீஸ்வரர் நவகிரகங்களில் மிகுந்த நேர்மையான குணமும், சிவபக்தியும் உடையவர் அதனால்தான் தன் பேருடன் "ஈஸ்வரன்" பட்டத்தை சேர்த்துக்கொள்ளும் வரத்தைப் பெற்றார். நாம் செய்த பாவங்களுக்கு சற்றும் இரக்கம் காட்டாமல் தண்டிப்பது இவர் இறைவனிடம் பெற்ற ஐந்தொழில். இந்த தொழிலை இவருக்கு இறைவன் கொடுக்க காரணம் இவரின் நேர்மையான குணம்.  அதனால் தான் கிரகங்கள் அனைவரும் தங்கள் காரகங்களுக்கு ஏற்றார் போல் போகங்களையும் சுகங்களையும் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் இவர் சோதனைகளையும் கஷ்டங்களையுமே அள்ளி கொடுப்பார். அதே நேரத்தில் பல நல்லவைகளையும் மறக்காமல் செய்வார். இவரின் பாதிப்பு யாரையும் விடாது எடுத்துக்காட்டாக விநாயகர், ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களும் நலன், விக்ரமாதித்தன் போன்ற மன்னர்களும் கூட 7 1/2 வருடங்கள் கடந்தார்கள். இவரின் பாதிப்புகள் விநாயகர், ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களை எதுவும் செய்ய முடியவில்லை ஆனால் நம் போன்ற மக்கள் எப்படி தப்பிப்பார்கள். இதற்காக பல சிவபூஜைகள், விரதங்கள் போன்றவை சாத்திரங்களில் காட்டினாலும் அதில் இந்த எண்ணெய் ஸ்நானமும் ஒன்று.

      
ஆம் பொதுவாக எண்ணெய் ஸ்நானத்திற்க்கு எள் எண்ணெயே பயன்படுத்துமாறு சாத்திரங்கள் அறிவுறுத்துகின்றன. எள் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது பிடித்தது இது உஷ்ண குணமுடையது. இந்த எள்ளை ஆட்டி அதில் கிடைக்கும் எள்எண்ணெய் (நல்லெண்ணெய்) குளிர்ச்சி செய்வது. எந்த ஒரு தெய்வமும் பொதுவாக குளிர்ச்சியடைந்தால் தான் நன்மை செய்வார்கள். 



இந்த உடலுக்கு உயிர், நரம்பு மண்டலம், நாக்கு, பிடரி போன்ற இடங்களுக்கு காரகனாக விளங்கும் சனீஸ்வர பகவான் தனக்கு பிடித்த எள்ளிலிருந்து எடுத்த எண்ணெயை தன் நாளில் (சனிக்கிழமை) நல்லெண்ணெய் தேய்த்து முழுக தான் ஆதிக்கம் பெற்ற நரம்பு மண்டலம், மனம் போன்றவற்றை வலிமை அடையச்செய்கிறார் ஆயுள் வளரச் செய்கிறார். தன்னால் வரும் பாதிப்புகளை குறைத்துக் கொள்கிறார்.  இந்த காரணத்தால் தான் "சனி நீராடு" என்று கூறுகிறார்கள்.  

சனீஸ்வர பகவானின் பாதிப்புகளை பொதுவாக குறைக்கச் செய்பவர் புதன். எனவே புதனும் எண்ணெய் ஸ்நானத்திற்கு ஏற்ற நாளாக குறிப்பிடப்படுகிறது. NUMEROLOGY யிலும் கூட சனீஸ்வர ஆதிக்கம் பெற்ற நம்பர் 8 ஆல் வரும் தோஷங்களை புதன் நம்பர் 5 குறைக்கும் என்று கூறுகிறார்கள்.   

எனவே அறிவும் உண்மையும் பெற்ற நாமும் இந்த எண்ணெய் குளியலுக்கு திரும்புவோம். சாத்திரங்களில் பல உண்மை பொய் கலந்தே தோன்றியுள்ளது காரணம் அதை இயற்றிய ஆசிரியர்களும் பல மாயை மயக்கத்தில் இருந்ததுதான் காரணம். உண்மையான காரணங்கள் உள்ள சாத்திர அறிவுரைகளை விலக்காது ஏற்றுக் கொள்வதும் விட்டுவிடுவதும் அவரவர் பக்குவமே. 



  



இது முடியவில்லை, புதன் சனிக்கிழமை தவிர ஜோதிட கணிதாமிர்தம் இன்னும் சில கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. அது 


"கற்பினால் மூன்றிலெண்ணெய் கடி மணம் சிரார்த்தம் போக்கு 
வற்புறு பிணிமருந்து மயிர் வினை மருவலாகா 
விரிப்புகள் விற்புகல் உழுதல் விற்றல் விருந்துண்ணல் வழங்கல் செய்தல் 
பொற்பணி மகுட ஆடை புனைதலும் புகலுமாதே"

பொருள் : ஜாதகன் பிறந்த ஜென்ம வாரம், திதி, நட்சத்திரம் (தான் பிறந்த வாரம், திதி, நட்சத்திரம்) நாட்கள் வரின் அந்த நாட்களில் எண்ணெய் குளியல், கல்யாணம் செய்வது, சிரார்த்தம்(திவசம்) கொடுப்பது, வியாதிக்கு மருந்துண்பது, ஷவரம் செய்து கொள்வது, மனைவியுடன் சேர்வது போன்றவை கூடாது.       
வியாபாரம் செய்ய தொடங்கலாம், பூமியில் உழுதல் செய்யலாம், புது ஆடை ஆபரணம் அணியலாம், தான தர்மம் செய்ய இதர்க்கு மேற்கண்ட நாள் தடை இல்லை. என்பது ஜோதிட கணிதாமிர்தத்தின் கருத்து.    

எண்ணெய் குளியலுக்கு இந்த சட்டம் பொருந்தியுள்ளது. இந்த நாளை இந்த தொழில் செய்ய என்ற இந்த சட்ட திட்டங்களை மதிக்காதவன் எவ்வாறு பாதிப்பான் என்றும் கூறுகிறார்கள்.       

"இத்தினம் கவனியாதோர் இகத்தினில் துன்பமுற்று 
எத்ததியும் கஷ்டத்தால் ஏங்கியே துயரடைந்து 
சுத்தமில்லாமல் நாளும் சுகமின்றி கவலையாலே 
சித்தமும் கலங்கி நாட்டில் திகைத்து அலைந்திடுவர் தானே"
ஜோதிடகணிதாமிர்தம்  
      
எனவே நாளும் கோளும் பார்த்து பணிகளைச் செய்.


                       




மேற்கண்ட சரியான நாட்களில் எண்ணெய் குளியல் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் காலை 6 மணிக்கு தலை உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் பூசிக்கொண்டு ஒருமணி நேரம் கழித்து அரப்பு அல்லது சிகைக்காய் அல்லது பச்சைப்பயறு மாவு ஏதேனும் ஒன்றை எடுத்து சுடுநீரில் நன்கு தேய்த்து குளிக்கவும். முதலில் மேற்சொன்ன ஏதேனும் ஒரு மாவை பயன்படுத்தி எண்ணெய் பசை முழுவதும் போக குளித்து விட்டு பின் சோப்பு போட்டும் குளித்துக்கொள்ளலாம். OIL BATH எடுத்த அன்று பகலில் கண்டிப்பாக தூங்க கூடாது, இரவில் கண்டிப்பாக கண்விழிக்கவோ புணர்ச்சியோ கூடாது. அந்த நாள் முழுவதும் பால், தயிர், மோர், நெய் இவற்றை உணவில் இருந்து விலக்கவும். வெய்யிலில் அதிகம் நடக்கவும் அலையவும் கூடாது (இந்த ஒரு நாள் மட்டுமே இந்த பத்தியம்) பத்தியம் மீறினால் தலைநோவு வரும். சரியான முறையில் எண்ணெய் ஸ்நானம் எடுப்பவனை நமன் (எமன்) நெருங்க மாட்டார்.         

இந்த கட்டுரையை படித்து இதனால் பயன்பெறும் நபர் ஒருவராக இருந்தாலும், அந்த பயன் அடையும் அந்த நபருக்காக இந்த பதிவை உரித்தாக்குகிறேன். 

வெம்மையிலும் இந்த குளியல் பதிவுகள் தொடரும் 
அடுத்த பதிவு   "கோளும் நாளும் PART - 3" SOON





























No comments:

Post a Comment

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...