சிவபெருமான் அர்ஜுனனுக்கு ஆயுதம் அருளியது
பாடல் : தேவாரம் 7 ஆம் திருமுறை
பாடியவர் : சுந்தரர்
பாடல் பெற்ற இடம் : ஆவடுதுறை
இறைவன் : மாசிலாமணி நாதர், அதுல்ய குஜாம்பிகை
அர்ஜுனன் சிவபெருமானை நோக்கி தவம் செய்தல்
பாடல்
"வீரத்தால் ஒரு வேடுவனாகி
விசைத்தோர் கேழலைத் துரந்து சென்றணைந்து
போரைத் தான் விசயன் தனக்கு அன்பாய்ப்
புரிந்து வான்படை கொடுத்தல் கண்டடியேன்
வாரத்தால் உன் நாமங்கள் பரவி
வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி
ஆர்வத்தோடு வந்து அடியிணை அடைந்தேன்
ஆவடுதுறை ஆதி எம்மானே"
பொருள்
கேழல் - பன்றி
வான்படை - போர்க்கருவி
திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, நீ,
ஒரு வேடுவனாய் உருக்கொண்டு, ஒரு பன்றியை, வீரத்துடன் விரைந்து
துரத்திச் சென்று, உன்னை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்த
அருச்சுனனை அடைந்து, அவன்மேல் வைத்த விருப்பத்தால் அவனோடு
போர் புரிந்து, பின்பு அவனுக்கு, சிறந்த படையாகிய பாசுபதக் கணையை
அளித்தமையை அறிந்து, அடியேன் உனது தன்மைகளை நினைந்து உருகி,
உனது திருப்பெயர்களை அன்போடு சொல்லி உன்னை வழிபட்டு,
ஆர்வத்தோடு வந்து உன் திருவடியிணையை அடைந்தேன்; என்னை
ஏன்று கொண்டருள்.
கு-ரை: 'விசைந்து' என்பது பாடம் அன்று. 'அன்பாய்ப் போரைப் புரிந்து
விசயனுக்குப் படை கொடுத்தல்' என இயையும், இவ்வாறு அருச்சுனனுக்கு
அருளிய வரலாற்றை, பாரதத்துட் காண்க.
இஃது, அருச்சுனனுக்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது.
|
|
அர்ஜுனன் சிவபெருமானோடு போரிட்டு அருள் பெற்ற காட்சிப் படங்கள்
தேவாரம் தொடரும்
நீண்ட இடைவேளைக்குப் பின்
BLOG இல் மீண்டும் இவன்
No comments:
Post a Comment