Wednesday, 22 May 2019

கோனேரி ராஜபுரம் - சுயம்பு நடராஜரை காண ஒரு SUMMER VISIT

கோனேரி ராஜபுரம் - சுயம்பு நடராஜரை காண ஒரு SUMMER VISIT

கோனேரி ராஜபுரம் என்ற ஊர் சிறிய கிராமம் இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. கோனேரி ராஜபுரத்திற்கு புராண பெயர்கள் திருநல்லம், திருவல்லம் என்றும் உண்டு. இங்கு இறைவன் பூமிநாதர் என்ற பெயருடனும் இறைவி அங்கவள நாயகி என்ற பெயருடனும் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த கோவிலை பற்றி GOOGLE தேடலில் போதுமான அளவு விஷயங்களும், விசேஷங்களும் விளக்கப்பட்டுள்ளது. அதன் LINK 

மூலவர் பூமிநாதர் PHOTO REF : DINAMALAR 





நாம் மற்றவருடைய ARTICLE லில் இருந்து கோவிலை பற்றிய கருத்துக்களை COPY அடித்து போடுவது நாம் செய்து கொண்டிருக்கும் (BLOG WRITING) செயலுக்கு எதிரானதாகும். நாம் BLOG எழுதுவதன் முக்கிய நோக்கமே நம் சொந்த கருத்துக்களையும், செய்திகளையும், யோசனைகளையும் பகிர்ந்து கொள்ளவே தவிர மற்றவர் முயற்சிக்கு நாம் பெயர் தேடிக்கொள்ள அல்ல. எனவே கோனேரி ராஜபுரத்தில் நான் கண்ட அதிசயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் இன்னும் தெரிய வேண்டும் என்றால் மேலுள்ள LINK ஐ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.    

நான் கோவிலுக்குள் காலை வைக்கும் போது உச்சி வெயில் நேரம் 1PM இருக்கும். பொடி சுடுகிறது என்று ஓடி வந்து நிழலுக்கு ஒதுங்கும் முன்னரே வாயடைத்து போய் கன்னங்களின் ஓரங்களில் ஒரு சிறிய சிரிப்பும், வியப்பும் என்னை தழுவிக்கொண்டது. காரணம் கோவிலின் முகப்புறம் பலிபீடம், கொடிமரம் இருக்கும் இடத்தில் நான்கண்ட பழங்கால சுவர்(ROOF) ஓவியங்கள்.      





























   
ஓவியங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களின் அமைப்பு ஓவியங்களில் பிரிட்டீசாருடைய படங்கள் இவைகளை பார்க்கும் போது ஓவியம் ஒரு நூற்றாண்டுக்கு முன் வரையப்பட்டதாக இருக்கலாம் என கணிக்க தோன்றுகின்றது.  

ஓவியங்களை பார்த்து படம் எடுத்த பிறகு கோவிலுக்குள் நுழைந்தேன் கோவில் கருவறை பூட்டிவிட்டனர். கருவறை வெளியிருந்தே இறைவனை வணங்கிக்கொண்டிருக்கும் போது இறைவன் அனுப்பியவர் போல் அர்ச்சகரே வந்து மூடிய கருவறை நடை திறந்து தீபாராதனை காட்டினார். லிங்க சொரூபமான பூமிநாதர் பற்றியும் கோனேரி ராஜபுரத்தில் இறைவனால் உண்டான திருவிளையாடல் பற்றியும் அர்ச்சகர் சொல்லியபோது சுயம்பு நடராஜர் என்று ஒரு வார்த்தை குறிப்பிட்டார். சுயம்பில் லிங்கம் உருவாகலாம் அது எப்படி பாதம் தூக்கி ஆடும் அம்பலவாணன் இங்கு சுயம்பு ஆனார் அதுவும் சிவகாமவல்லியுடன் அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி மனதில் எழ குஞ்சித பாதனை காணச்சென்றேன்.       







இதுவரை இவ்வளவு அருகில் இவ்வளவு பெரிய நடராஜரை கண்டது இல்லை. நடராஜரின் அழகிய தாண்டவ கோலத்தையும் சிவகாமவல்லியின் கருணையும் பெற்றபின் அர்ச்சகரின் அனுமதியோடு சுயம்பு நடராஜரை PHOTO எடுத்துக்கொண்டேன். அர்ச்சகர் இன்னும் சில அதிசயங்களையும் காட்டினார். நடராஜர் சுயம்பு உருவத்தில் ஜடாமுடியில் ராகு கேது இருந்தார்கள், இறைவன் கால் தூக்கி ஆடும் இடது புற காலில் கோடரியால் வெட்டிய தழும்பு, மணிக்கட்டு பகுதியில் தேமல், அக்குள் பகுதியில் ஒரு முடி, மரு என சாதாரண மனித உடலில் காணும் விஷயங்கள் இறைவன் சிலையிலும் இருந்தது. இதன் காரண திருவிளையாடலை கீழே பார்ப்போம். இறைவனை நன்கு சேவித்த பின் அவர் நியாபகத்திலேயே வீடு திரும்பினேன். தான் சுயம்பு நடராஜராக வந்த திருவிளையாடல் கதையை பார்ப்பவர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.           


மேலே உள்ள நடராஜர் PHOTO கோனேரி ராஜபுரத்தில் நான் எடுத்த சுயம்பு நடராஜர் 

நடராஜர் சுயம்பு கோலமான கதை 


கோனேரிராஜபுரம் சிவாலயத்தில், நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.

சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள்.

அவர்கள் இருவரும் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் கேட்டார்கள். இழி குலத்தோர் எனக்கருதி அறியாமையால் அங்கிருந்தவர்கள், இறைவனுக்கு தண்ணீர் தர மறுத்தனர். சிவனும், அம்பிகையும் உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர்.


இறைவன் அடியவனை ஆட்கொள்ள வந்த அவதாரம் 
இந்த ஓவியம் கோவிலின் முகப்பிலேயே வரையப்பட்டுள்ளது 



சிலையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி, ‘உலைக் களத்தில் ஏது தண்ணீர்?. வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, குடியுங்கள்’ என்று அந்த தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை எடுத்துப் பருகிவிட்டனர். மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும், சிவகாமி அம்பாள் சிலையும் ஆக மாறிப்போனார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.

‘இவ்வளவு அதி அற்புதமான சிலையை எவ்வாறு செய்ய முடிந்தது?’ என்று சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய்யுரை கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான்.


இன்னும் ஆயிரம் ஆயிரம் அற்புதங்கள் நிறைந்த கோனேரி ராஜபுரத்திற்கு வாழ்வில் ஒரு முறையாவதும் செல்ல வேண்டும். DON'T MISS IT VIEWERS இன்னும் இக்கோவிலின் வைத்தியநாத சுவாமி விசேஷம், முருகன் விநாயகர் என்று தல வரலாறு மற்றும் புராண வரலாறும் நீளும். இந்த கோவில் ஒரு ராணியால் கட்டப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.    



1 comment:

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...