முப்புர அரக்கர்களுக்கு சிவபெருமான் அருளியது
பாடல் : தேவாரம் 7 ஆம் திருமுறை
பாடியவர் : சுந்தரர்
பாடல் பெற்ற இடம் : ஆவடுதுறை
இறைவன் : மாசிலாமணி நாதர், அதுல்ய குஜாம்பிகை
"ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ
உன்னை உன்னிய மூவர் நின் சரணம்
புக்கு, மற்றவர் பொன்னுலகு ஆளப்
புகழினால் அருள் ஈந்தமை அறிந்து
மிக்க நின் கழலே தொழுது, அரற்றி,
வேதியா! ஆதி மூர்த்தி! நின் அரையில்
அக்கு அணிந்த எம்மான்! உனை அடைந்தேன்
ஆவடுதுறை ஆதி எம்மானே"
பாடலின் பொருள்
வேதம் ஓதுபவனே, உலகிற்கு முதலாய மூர்த்தியே, உன் அரையில் எலும்பை அணிந்த பெருமானே, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, நீ, மூன்று ஊர்களில் ஓங்கி எரிகின்ற நெருப்பை ஒருசேர எழுப்பியபொழுது, அங்கு உன்னையே நினைத்திருந்த மூவராகிய அவர் மட்டில் உய்ந்து, உன் திருவடியை அடைந்து, மேல் உலகத்தை ஆளும் வண்ணம், அவர்கட்கு, புகழத்தக்க வகையில் திருவருள் ஈந்தமையை அறிந்து, அடியேன், மேலான உனது திருவடியையே தொழுது முறையிட்டு, உன்னை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
கு-ரை: 'முப்புரத்திலும் ஒக்க எரி தூவ' என்க. எரியை உண்டாக்கினமையை, தூவியவாறாக அருளினார். திரிபுரம் எரித்த காலத்தில், சிவபத்தியிற் பிறழாதிருந்த மூவரைச் சிவபிரான் உய்யக் கொண்டமையை மேலே உரைத்தாம் (தி. 7 பா. 55 பா. 8); கண்டு கொள்க.
இது, முப்புரம் எரித்தஞான்று மூவர்க்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது.
இத் திருப்பதிகத்துள்ளும், ஏனைய திருப்பாடல்களை நாம் பெறேமாயினேம்.
இத் திருப்பதிகத்துள்ளும், ஏனைய திருப்பாடல்களை நாம் பெறேமாயினேம்.
திரிபுரம் எரித்த சிவபெருமான்
பல்வேறு காட்சிப் படங்களுடன்
திரிபுராந்தகர் கற்சிற்பம்
திரிபுராந்தகர் சந்தன சிற்பம்
90 களில் வெளிவந்த ஹிந்தி SERIAL-களில் திரிபுரம் என்ற முப்புர அரக்கர்களை சிவன் அழித்த காட்சிகள், அன்றைய GRAPHICS காட்சிகள் இவ்வளவு தான் நம்மை திருப்தி படுத்த முடிந்தது
திருவாவடுதுறை ஊரில் அதுல்ய குஜாம்பிகை உடனமர் மாசிலாமணிநாதர் இறைவனிடத்தில் சுந்தரர் பெருமானால் பாடப்பட்ட ஐந்து தேவார பாடல்கள் இத்துடன் முற்றும், இந்த ஊரில் சுந்தரர் பெருமான் பாடிய ஐந்து பாடல்கள் மட்டுமே இன்று உள்ளது மீதி ஐந்து பாடல்கள் ஓலைச்சுவடிகள் கரையானால் அழிந்துவிட்டன.
ந ம சி வ ய
பதிவுகள் தொடரும்
No comments:
Post a Comment