Wednesday, 27 February 2019

நீ அம்மா பையனா❓ அப்பா பையனா❓

நீ அம்மா பையனா❓ அப்பா பையனா❓
YOU ARE FATHER CHILD OR MOTHER CHILD 


ஒவ்வொருவர் வாழ்விலும் இதைப்போல் ஒரு கேள்வி எழும். ஆம். குழந்தையாக இருக்கும் போது அப்பா அம்மாவுக்கு நடுவில் படுத்துக்கொண்டு கொஞ்சி குலாவுதலும், குறும்பாக அப்பா அம்மா கேட்கும் கேள்விக்கு மழலையாய் பதில் சொல்லுதலும். அப்படி எழும் கேள்விகளில் கண்டிப்பாக இந்த கேள்வி இடம் பெறும். 

தங்கம் நீ அப்பா பையனா அம்மா பையனா ?    
செல்லம் நீ அப்பா பொண்ணா அம்மா பொண்ணா ?    

என்று, அந்த கேள்விக்கு குழந்தை நேரத்தை பொருத்து நான் அப்பா பொண்னு; நான் அம்மா பையன் என்றும், சில குழந்தைகள் புத்திசாலித்தனமாக நான் அம்மா அப்பா பையன் என்று இருவரையும் சேர்த்துக்கொள்ளும்.    

உண்மையாக இந்த கேள்வியை கூர்ந்து நோக்கினால் ஒரு மனிதன் குழந்தையாய் பிறக்கும் போது அவன் தன் தாயை போல் இருக்கிறானா அல்லது அவன் தன் தந்தையைப் போல் இருக்கிறானா என்று கேட்டால் அவன் முக சாடையை வைத்து கூறுவார்கள். அது உண்மை தானா ?


இந்த படத்தில் அப்பா குழந்தையாய் இருந்தபோது அவர் முகம் போலவே அவரின் குழந்தையும் உள்ளது. இது போன்றொரு உதாரணம். கண்கள், உடலின் நிறம், எடை, முடி ஆகியவற்றை பார்த்தும் குழந்தை அம்மா போல் அல்லது அப்பா போல் உள்ளது என்று தீர்மானிப்பார்கள்.  




இன்று ஒரு குழந்தை எந்த அப்பா அம்மாவுக்கு பிறந்தது என்று கண்டறிய DNA TEST உள்ளது ஆனால் அந்த குழந்தை யாரை போல் உள்ளது என்று கூற முடியுமா ? அப்படியெனில் ஒரு குழந்தையின் உடல் மற்றும் ஆன்மாவை தீர்மானிக்க இருவரும் (அப்பா, அம்மா) சம பங்களிப்பு கொடுத்துள்ளார்களா ?

இதே கேள்வியை முற்றும் துறந்த ஞானிகளிடம் கேட்டால் அல்லது சித்தர்களிடம் கேட்டால் அவர்கள் பதில் என்னவாக இருக்கும்....... 

ஆம் 
தாய் தந்தை இருவரின் விந்து நாத சக்தி, நேரம் காலம், தாய் தந்தை இருவரின் பூர்வ புண்ணியம், குழந்தையாய் பிறக்கப்போகும் ஆன்மாவின் பூர்வ புண்ணியம், இவர்கள் செய்த தர்மம் பக்தி என பல விஷயங்களை கணக்கில் வைத்துத் தான் அந்த குழந்தை பிறக்கும். இந்த குழந்தை எடுக்கும் பஞ்ச பூத உடலுக்கு அப்பா அம்மா 100 % பங்களிக்கிறார்கள். ஆனால் இந்த குழந்தை அனுபவிக்கும் சுகபோகங்கள், கஷ்டநஷ்டங்கள் அனைத்தும் மேற்குறிப்பிட்டுள்ளவாறு அமைய நவகிரகங்கள் செயலாற்றுகிறார்கள்.



அப்பா அம்மாவின் பங்களிப்பு  

"நாடியும் நாளமும் நவில இள எலும்பும் 
வெள்ளை நீரும் வெள்ளிய பற்களும் 
தலைமயிர் நகமும் தந்தையின் கூறாம்"

பொருள் 
நாடி - நரம்பு மண்டலம் ( NERVE )
நாளமும் - ரத்த குழாய்கள் ( BLOOD DUCT )
எலும்பு - BONES
வெள்ளை நீரும் - SEMEN 
பற்கள் - TEETH 
தலைமயிர் - HAIR 
நகம் - NAILS 
இவை அனைத்தும் தந்தையின் கூறாக குழந்தைக்கு கிடைப்பது. அந்த குழந்தை பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி இந்த குறிப்பிட்ட உடல் பாகங்கள் ( HUMAN ORGANS ) தந்தையையிடம் இருந்து குழந்தைக்கு கிடைப்பது.   




"சிறிய குடலும் சிகப்பு நீரும் 
மருவிய கொழுப்பும் மன்னும் ஈரலும் 
நுவல் நுரை ஈரலும் நோக்குமிதயமும் 
தசையும் நிணமும் தாயின் கூறாம்"

பொருள் 
சிறிய குடல் - INTENSTINE 
சிகப்பு நீர் - BLOOD 
கொழுப்பு (நிணம்) - FAT ( CHOLESTEROL )
மன்னும் ஈரலும் - மண்ணீரல் - SPLEEN  
நுரையீரல் - LUNGS 
இதயம் - HEART 
தசை - MUSCLES
  
இவை அனைத்தும் தாயின் கூறாக குழந்தைக்கு கிடைப்பது. அந்த குழந்தை பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி இந்த குறிப்பிட்ட உடல் பாகங்கள் ( HUMAN ORGANS ) தாயிடம் இருந்து குழந்தைக்கு கிடைப்பது.   




குழந்தையின் உயிர்நிலை 

"அறிவும் ஆக்கமும் ஆழ்ந்த நோக்கமும் 
இன்பமும் துன்பமும் இனிய வாழ்க்கையும் 
உயிரின் குணமென உரைப்பர் நூல் வல்லோர்"

பொருள் 
பிறக்கப்போகும் குழந்தை எத்தகைய அறிவுடைமை உள்ளது, அதன் நோக்கம் எதாவது நிலையை அடையும் முயற்ச்சி, ஆக்கம் (செல்வம்), இன்பம் துன்பம் ஆகிய அனைத்தும் அந்த குழந்தையின் பூர்வ ஜென்மத்தில் பெற்றுவந்துள்ள பாவ புண்ணியத்தை பொறுத்துத்தான் அமையும். அவ்வாறாக இருக்கத்தான் நவகிரகங்கள் இறைவனால் படைக்கப்பட்டு செயலாற்றுகின்றனர்.  

  


குழந்தையின் உணவால் பெறும் அமைப்பு  

"உடலின் அமைப்பும் ஒள்ளிய நிறமும் 
ஆடலும் ஆண்மையும் அமைந்த நிலையும் 
நாணமும் மடமும் நானற் கொள்கையும் 
உணவின் சாரமென் உரைத்தனர் நூலோர்"

பொருள் 
உடல் அமைப்பு (BODY WEIGHT AND SHAPE), நிறம், சுறுசுறுப்பு, ஆண்தன்மை (TESTOSTERONE), பெண்தன்மை (PROSTEROGEN), அழகு இவையனைத்தும் உணவின் அடிப்படையில் மனிதன் வடிவாகிறான்.       






இவ்வாறாக உணவை அடிப்படையாகக் கொண்டும் மனிதன் வடிவமைப்பைப் பெறுகிறான்.

குழந்தை உருவாகும் காலநிலை 


இன்னும் சில உதாரணங்களை மட்டும் இங்கு எடுத்துக்காட்டுகிறேன். 
( LITTLE-BIT REFERENCES ) 

அப்பா அம்மா ஒன்று சேர்ந்த காலத்தைப் பொருத்தும் குழந்தை வடிவமைப்பை பெறுகிறது. சாந்தி முகூர்த்தம் என பெரியவர்கள் குறித்து கொடுக்கும் நேர காலங்களை இங்கு நான் குறிப்பிடவில்லை. இது சற்று புதிய விஷயம்.


திருமூலர் அருளிய பாடல்கள் 

கர்பத் திருமந்திரம் 
"ஆண்மிகினாணாம் பெண்மிகிற் பெண்ணும் 
பூணு மிரண்டொன்றிப் பொருந்தி லலியாகும் 
தான் மிகவாகிற் தரணி முழுதாளும்
பான்மை மிகுந்திடிற் பாய்ந்தது மில்லையே "
   
பொருள் : ஆண், பெண் சங்கமத்தில் சுக்கிலம் மிகுதியானால் ஆணாகவும், சுரோணிதம் மிகுதியானால் பெண்ணாகவும், இரண்டும் சமமானால் அலியாகவும், சுக்கிலம் அளவுக்கு மீறி இருந்தால் பிறக்கும் குழந்தை பூமியை ஆளும், சுரோணிதம் அளவுக்கு மீறி இருந்தால் கரு உற்பத்தியாகமாட்டாது என்கிறார் திருமூலர் பெருமான்.      

( சித்தர்களின் சாத்திரத்தைப் பொறுத்தவரை மலடு என்பது பெண்களில் 10% மட்டுமே, ஆண்களில் 90% என்று கூறுகிறார்கள், ஒரு பெண்மணிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அதற்க்கு 90% காரணம் அவள் கணவன் மட்டுமே. இது அனைவருக்கும் பொருந்தும் )

கர்பத் திருமந்திரம் 
"மாதாவுதரம் மலமிகின் மந்தனாம் 
மாதாவுதரஞ் சலமிகி லூமையாம் 
மாதாவுதரத் திரண் டொக்கிற் கண்ணில்லை 
மாதாவுதரத்தின் வந்த குழவிக்கே"  

பொருள் ஆண், பெண் சங்கம காலத்தில் தாயின் வயிற்றில் மலம் மிகுதியாய் இருந்தால் பிறக்கும் குழந்தை மந்தனாக (சோம்பேறியாக) பிறப்பான், தாயின் வயிற்றில் சிறுநீர் மிகுதியாய் இருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகும், தாயின் வயிற்றில் மலம் மற்றும் சிறுநீர் ஒரே அளவில் மிகுதியாய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண்ணில்லாத குருடாய் பிறக்கும். இது தாயின் நிலைக்கு மட்டுமே பொருந்தும்.    


கர்பத் திருமந்திரம் 
"பாய்கின்ற வாயு குறுகிற் குள்ளனாம் 
பாய்கின்ற வாயு வளையின் முடமாகும் 
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் 
பாய்கின்ற வாயு மாதர்க் கிலை பார்க்கிலே"

பொருள் ஆண், பெண் சங்கம காலத்தில் தகப்பனின் சுக்கிலத்தில் உள்ள வாயு குறுகினால் அச்சிசு குட்டையாக பிறப்பான். சுக்கிலத்தில் உள்ள வாயு வளையுமாகில் குழந்தை கை அல்லது கால் முடமாக பிறக்கும். சுக்கிலத்தில் உள்ள வாயு நடுவிற் பிளவுபடுமானால் குழந்தை கூன் முதுகு உடையவனாக பிறக்கும். இது பெற்றோரில் பெண்ணுக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலை தந்தையின் உடலின் வாயு நிலை பொறுத்தே குழந்தை அமையும்.   
  
இதற்குமேல் வேண்டாம் என்று. பிறக்கும் குழந்தையின் அமைப்பு விதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இன்னும் இதை ஆராய்ந்தால் இது தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும். இந்த SCIENCE சித்தர்களால் போதிக்கப்பட்டது. நோய்க்கான சிறு மூலிகை மட்டும் பற்றி அவர்கள் எழுதவில்லை. HUMAN ANATOMY, PHYSIOLOGY, PATHOLOGY, MATERIA MEDICA ECT....ECT...  என பல பிரிவுகளில் தங்கள் அறிவை போதித்தது மட்டும் இல்லாமல் இதனால் தமிழையும் வளர்த்துள்ளனர். தமிழ் மருத்துவத்தால் எதையும் விளக்கி கூற முடியாது என்று எந்த MODERN MEDICAL SCIENCE -ம் கூறிவிட முடியாது. நம் மருத்துவத்தை அழித்தால் மட்டுமே ஆங்கில மருத்துவம் நிலைநாட்ட முடியும் என்று இவை போன்ற செய்திகளை அடுத்த தலைமுறைக்கு தெரிய வொட்டாமல் மறைந்திருக்கலாம். வெளிவராத 1000 ற்கும் மேற்பட்ட வைத்திய முறைகளும், சித்த வைத்திய அறுவை சிகிச்சை முறைகளும் மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது.  



  

    

இந்த பதிவை அறிவுடை நிலையாக எடுத்துக்கொண்டாலும் சரி, பாலியல் கல்வியாக எடுத்துக்கொண்டாலும் சரி இந்த பதிவு முழுவதும் சித்தர்களின் குரலே அன்றி என் சொந்த வார்த்தைகள் எதுவும் இல்லை. வாசகர்களின் கருத்துக்கு முரணாகவோ அல்லது பிடிக்காமலோ இருந்தால் என்னை குறைகூற வேண்டாம். 

இறைவன் என்னை நன்றாகப் படைத்தான் 
தன்னை நன்றாக தமிழ் செய்யும்மாரே 

-----  திருமூலர்  -----

நல்லதோர் வீணை செய்தே 
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? 
சொல்லடி சிவசக்தி 
என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். 
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
--- பாரதி ---


நன்றி 
சுவாரஸ்யம் தொடரும் .........................    




5 comments:

  1. அருமை ஐயா👌👌

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் நண்பரே. சில இடங்களில் அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...